தேடுதல்

தீபாவளி தீபாவளி 

தீபாவளித் திருநாள் சிறப்பு செய்தி - அருள்பணி அருள் ஜான்போஸ்கோ

இரைச்சல் என்பது, அவசியமில்லாத, விரும்பத்தகாத, தொந்தரவுசெய்கிற ஓசைகளின் தொகுப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

வேலூர் மறைமாவட்டத்தின் அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள், நவம்பர் 04, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட தீபாவளித் திருவிழாவுக்கென சிறப்பு செய்தி ஒன்றை வழங்கினார். வாழ்க்கையை நன்றாகப் புரிந்துகொள்ள மூன்று இடங்களுக்குச் செல்லவேண்டும். 1. மருத்துவமனை. அங்கே உடல்நலத்தைவிட அழகானது வேறெதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2. சிறைச்சாலை. சுதந்திரம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3. கல்லறை. வாழ்வு என்பது ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு திருநாளும் வாழ்வைப் புரிந்துகொள்ளவும், அதை அழகாய் வடிவமைத்துக் கொள்வதற்குமான வழிகளாக உள்ளன. நாம் நடந்துசெல்லும் இந்தப் பூமி, நாளை நமது மேற்கூரையாக மாறிவிடும்.. இவ்வாறெல்லாம் அருள்பணி அருள் ஜான்போஸ்கோ அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்

தீபாவளி சிறப்பு செய்தி - அருள்பணி அருள் ஜான்போஸ்கோ
04 November 2021, 14:35