தேடுதல்

Vatican News
நூறு ஆடுகளின்மேல் அன்புகூரும் மேய்ப்பராக  விளங்கும் இயேசு நூறு ஆடுகளின்மேல் அன்புகூரும் மேய்ப்பராக விளங்கும் இயேசு 

மகிழ்வின் மந்திரம் : நூறு ஆடுகளின் மேய்ப்பராக...

"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், ஒவ்வொருவரையும் சந்திக்கச்செல்லும் இறைமகனைப்போல, கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, தன் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும்." (Misericordiae Vultus)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மரபு வழியில் திருமணம் புரியாமல், இணைந்துவாழும் தம்பதியருக்கு உதவியாக, திருஅவையின் பணியாளர்கள் ஆற்றும் மேய்ப்புப்பணியில், எவ்வாறு கருணையை மையப்படுத்தி, அறிவுசார்ந்த முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதை, 8ம் பிரிவில் விளக்கிக்கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 309ம் பத்தியில் வழங்கியுள்ள எண்ணங்களின் சுருக்கம் இதோ:

மேய்ப்புப்பணி சார்ந்த இச்சிந்தனைகள், இரக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித ஆண்டில் இடம்பெறுவதை, இறைவனின் பராமரிப்பாகக் கருதலாம். ஏனெனில், குடும்பங்களைப் பாதிக்கும் பல்வேறு சூழல்களில், "நற்செய்தியின் இதயத்துடிப்பாக விளங்கும் இறைவனின் கருணையைப் பறைசாற்ற திருஅவை பணிக்கப்பட்டுள்ளது. எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், ஒவ்வொருவரையும் சந்திக்கச்செல்லும் இறைமகனைப்போல, கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, தன் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும்." (Misericordiae Vultus) இயேசு, தொண்ணூற்றொன்பது ஆடுகளுக்கு அல்ல, மாறாக, நூறு ஆடுகளின்மேல் அன்புகூரும் மேய்ப்பராக விளங்குகிறார் என்பதை, கிறிஸ்துவின் மணமகள் புரிந்துவைத்துள்ளார். இந்தப் புரிதலின் அடிப்படையில், இறையரசு நம் மத்தியில் ஏற்கனவே பிரசன்னமாகியுள்ளது என்பதன் அடையாளமாக, இரக்கத்தின் மருந்து, மதநம்பிக்கையாளர்களையும், மதத்தைவிட்டு விலகிவாழ்வோரையும் சென்றடையவேண்டும். (அன்பின் மகிழ்வு 309)

02 November 2021, 13:42