தேடுதல்

தம்பதியரிடையே கருத்து வேறுபாடு தம்பதியரிடையே கருத்து வேறுபாடு 

மகிழ்வின் மந்திரம் - திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்படாமை

மணமுறிவு பெற்ற கத்தோலிக்கர், தாங்கள் வாழவும், வளரவும் உதவும் அன்னையாக திருஅவையை உணர்ந்து செயல்பட, அவர்களின் ஒருங்கிணைப்புவழி உதவ முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மணமுறிவு பெற்ற, மற்றும், திருஅவைக்கு வெளியே திருமணம் புரிந்துள்ள கத்தோலிக்கர்களை மீண்டும் கிறிஸ்தவ சமுதாயத்திற்குள், பிறருக்கு இடறல் ஏற்படாதவண்ணம், முற்றிலுமாக இணைத்துக்கொள்ளும் பல்வேறு வழிகளின் தேவை குறித்து ஆயர் மாமன்றத் தந்தையர்கள் பேசியதில் எனக்கு உடன்பாடு உள்ளது.  வாதப்பொருத்தமுடைய இந்த ஒருங்கிணைப்பு, அவர்களின் மேய்ப்புப்பணி அக்கறைக்கு முக்கியத்துவம் நிறைந்தது. இதன் வழியாக அவர்கள், தாங்கள் திருஅவைக்கு உரியவர்கள் என்பதையும், அதில் அவர்கள் மகிழ்வுடன்கூடிய, பலன்தரும் அனுபவங்களைப் பெறமுடியும் என்பதையும் உணர உதவும். திருமுழுக்குப் பெற்ற இந்த சகோதரர், சகோதரிகளின் இதயங்களில் தூய ஆவியார், அனைவரின் நலனுக்காக கொடைகளையும் திறமைகளையும் வழங்கியுள்ளார். திருஅவையின் சில திருவழிபாட்டு, மேய்ப்புப்பணி அமைப்பு முறைகளில் இவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளநிலை, ஆழமாக ஆராயப்பட்டு, அவைகள் வெற்றிகொள்ளப்படலாம். இவர்கள் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக அல்ல, மாறாக, திருஅவையின் வாழும் அங்கத்தினர்களாக, தாங்கள் வாழவும், வளரவும் உதவும் அன்னையாக திருஅவையை உணர்ந்து செயல்பட இதன்வழி உதவமுடியும். இவர்கள் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்டுவதும், அவர்களை கிறிஸ்தவ வழியில் வளர்ப்பதும், என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், இந்த ஒருங்கிணைப்பு உதவுகிறது. (அன்பின் மகிழ்வு 299)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவின், 299ம் பத்தியில் கூறியுள்ளார்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 14:09