தேடுதல்

நாகசாகியில் அணுகுண்டால் தாக்கப்பட்ட அன்னை மரியா திருவுருவம் நாகசாகியில் அணுகுண்டால் தாக்கப்பட்ட அன்னை மரியா திருவுருவம் 

நேர்காணல் – ஆசிய கலாச்சாரத்தில் அன்னை மரியா

உரோம் மரியானும் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராகிய மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டென்னிஸ் அவர்கள், பாப்பிறை பன்னாட்டு மரியியல் நிறுவனத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வாண்டு செப்டம்பர் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை, பாப்பிறை பன்னாட்டு மரியியல் நிறுவனம் மரியியலும், கலாச்சாரங்களும் என்ற தலைப்பில், 25வது உலக அளவில் மாநாடு ஒன்றை, இணையம் வழி நடத்தியது. இதில், அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா என, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், 350க்கும் மேற்பட்ட மரியியல் வல்லுனர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் கலந்துகொண்டார். திருத்தந்தையும் இம்மாநாட்டிற்குச் செய்தி ஒன்றையும் அனுப்பினார். மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டென்னிஸ் அவர்கள், ஆசியக் கலாச்சாரத்தில் அன்னை மரியா என்ற தலைப்பில் உரையாற்றினார். உரோம் மரியானும் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராகிய இவர், பாப்பிறை பன்னாட்டு மரியியல் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம், இவருக்கு, ஆசியக் கண்டத்தில் மரியியல் நிறுவனங்கள், மரியியல் கருத்தரங்குகள் போன்ற எல்லாவற்றிற்கும் ஆலோசனைகள் வழங்குவது, அவற்றை மேற்பார்வையிடுவது போன்ற பணிகளை  ஒப்படைத்துள்ளது.

நேர்காணல் – ஆசிய கலாச்சாரத்தில் அன்னை மரியா
16 September 2021, 15:05