தேடுதல்

பள்ளியில் பாலியல் கல்வி வழங்கப்படுகிறது பள்ளியில் பாலியல் கல்வி வழங்கப்படுகிறது 

மகிழ்வின் மந்திரம்: பாலியல் கல்வியில் கவனம் செலுத்தப்படவேண்டியவை

பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தப்படும், அன்பு, ஒருவர் ஒருவர் மீது அக்கறை, அன்புடன்கூடிய மதிப்பு, மற்றும், ஆழமான அர்த்தமுள்ள தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள, பாலியல் கல்வியில் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'பாலியல் கல்வியின் தேவை' குறித்து 7 பத்திகளில் விளக்கியுள்ளார். 283ம் பத்தியில் அவர் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்...

பாலியல் கல்வியில் முதலாவதாக, “பாதுகாப்பு”, அதாவது “பாதுகாப்பான பாலியல் உறவை” மேற்கொள்வது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இத்தகைய சொற்கள், இயற்கையான முறையில் இடம்பெறும் இனப்பெருக்கத்திற்கு எதிர்மறையான   கண்ணோட்டத்தை கொடுக்கின்றன. எதிர்பாராத நேரத்தில் உருவாகும் குழந்தையை, விரும்பத்தகாத குழந்தையாகக் கருதவைக்கின்றன. இம்முறையில் சிந்திப்பது, குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் தன்மையுடைய இடங்களில், தன்னையே மையப்படுத்தி வாழ்வதையும், எதிர்ப்பு மனப்பான்மையையுமே வளர்க்கும். வளர்இளம் பருவத்தினர், திருமணத்திற்குத் தேவையான முதிர்ச்சி, விழுமியங்கள், அர்ப்பணம், சரியான இலக்குகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றனர் என்பதுபோல், அவர்கள் தங்களின் உடல்கள் மற்றும், ஆசைகளோடு விளையாட அனுமதிப்பது, பொறுப்பற்ற செயலாகும். இது, மற்றவரை, தங்களின் தேவைகள், அல்லது குறைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பயன்படுத்துவதற்கு வெளிப்படையாக ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். ஆனால், பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தப்படும், அன்பு, ஒருவர் ஒருவர் மீது அக்கறை, அன்புடன்கூடிய மதிப்பு, மற்றும், ஆழமான அர்த்தமுள்ள தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கப்படுவதே, பாலியல் கல்வியில் முக்கியமானதாகும். இத்தகையப் பாலியல் கல்வி, இளையோரை, திருமண வாழ்வில் தங்களையே, தாராளமாகக் கொடையாக வழங்குவதற்கு தயாரிப்பதாக இருக்கும். இவ்வாறு, திருமணத்தில் தாம்பத்திய உறவு, தம்பதியருக்கிடையே மட்டும் அர்ப்பணிப்பதன் அடையாளமாகவும் இருக்கும். (அன்பின் மகிழ்வு 283)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2021, 13:24