தேடுதல்

குழந்தையுடன் உரையாடல் குழந்தையுடன் உரையாடல்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் - நன்னெறி என்பது வளர்ச்சிக்குத் தடையா?

பிள்ளைகள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள், அவர்களை, மனத்தளர்வுக்கு இட்டுச் செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் மேலும் வளர்வதற்கு ஒரு தூண்டுதலாக இருக்கவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், 268 முதல் 270ம் வரையுள்ள பத்திகளில், பிள்ளைகள் தவறிழைக்கும்போது அவர்களைத் திருத்தும் முறைகள் குறித்து விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 270ம் பத்தியில்  கூறியுள்ள எண்ணங்களின் சுருக்கம்:

பிள்ளைகள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள், அவர்களை, மனத்தளர்வுக்கு இட்டுச் செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் மேலும் வளர்வதற்கு ஒரு தூண்டுதலாக இருக்கவேண்டியது அவசியம். நன்னெறியை எவ்வாறு அவர்களின் உள்ளார்ந்த நிலையாக மாற்றமுடியும் என்பது குறித்து சிந்திப்போம். நன்னெறி என்பது குழந்தையின் செயல்களுக்கு ஓர் ஆக்கப்பூர்வமான எல்லைக்கோடாக இருப்பதை உறுதிசெய்யும் அதேவேளை, குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லை என்பதையும் உறுதிச் செய்யவேண்டும். தீங்கு விளைவிக்கும் இரண்டு உச்சநிலைகளுக்கு இடையே ஒரு சமநிலை காணப்பட வேண்டும். குழந்தைகளின் ஆசைகளைச் சுற்றியே அனைத்தையும் எடுத்துச்செல்ல முயலும்போது, அக்குழந்தைகள், தங்கள் உரிமைகள் குறித்த உணர்வுடன் வளர்வார்களேயொழிய, அங்கு, பொறுப்புகள் குறித்த உணர்வு இருக்காது. அதற்கு மாறாக, கடமைகளை மட்டுமே வலியுறுத்தி வளர்க்கப்படும் குழந்தைகள், அவர்களின் மாண்பு, தனித்துவம்,உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பறிக்கப்பட்டவர்களாக, கடமைகள் குறித்த உணர்வுகளாலேயே மூழ்கடிக்கப்பட்டவர்களாக, பிறரின் விருப்பங்களையே நிறைவேற்றுபவர்களாக மாறுகிறார்கள். (அன்பின் மகிழ்வு 270)

03 September 2021, 12:45