தேடுதல்

ZAMBIA தேர்தலையொட்டி நடைபெறும் வன்முறைக்ளைத் தடுக்க இராணுவத்தின் கண்காணிப்பு ZAMBIA தேர்தலையொட்டி நடைபெறும் வன்முறைக்ளைத் தடுக்க இராணுவத்தின் கண்காணிப்பு 

போரோ, வன்முறையோ இல்லாதிருப்பது மட்டும் அமைதியாகாது

Zambia நாட்டிற்காக செபிக்க ஊக்கமளிக்கும் நோக்கத்தில், 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' என்ற தலைப்புடன், Lusakaவின் திருச்சிலுவை பேராலயத்தில் துவக்கிவைக்கப்பட்டுள்ள முயற்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் Zambia நாட்டில், வன்முறைகள், நாளுக்குநாள் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டி, இறைவேண்டல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அனைத்துலக கிறிஸ்தவ சபைகளின் அமைப்பு.

தனிமனித அளவிலும், இணையம் வழியாகவும் Zambia நாட்டிற்காக செபிக்க ஊக்கமளிக்கும் நோக்கத்தில், 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' என்ற தலைப்புடன், Lusakaவின் திருச்சிலுவை பேராலயத்தில் துவக்கிவைக்கப்பட்டுள்ள முயற்சியையும் குறிப்பிட்டுள்ளன கிறிஸ்தவ சபைகள்.

இந்த அமைதி முயற்சிகளுக்கு தன் ஆதரவை வெளியிட்டு செய்தி அனுப்பியிருந்த WCC உலக கிறிஸ்தவ சபைகளின் அவையின் உயர் அதிகாரியான கிறிஸ்தவ அருள்பணி Benjamin Simon அவர்கள், போரோ, வன்முறையோ இல்லாதிருப்பது மட்டும் அமைதியாகாது என்பதால், அமைதியை எற்படுத்துவது, அவ்வளவு எளிதானதல்ல என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Zambia மக்கள் இந்த தேர்தல் காலத்தில் அமைதியை உருவாக்குபவர்களாக செயல்பட, தூய ஆவியார் அருளை வழங்குவாராக, என, கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து, செய்தியொன்றை அனுப்பியுள்ளன.

திருப்பீடம், ஐக்கிய நாட்டு நிறுவனம் உட்பட, பல்வேறு உலக அமைப்புகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும், அமைதியான தேர்தலுக்கு அழைப்பு விடுத்து, தங்கள் வாழ்த்துக்களை ஏற்கனவே அனுப்பியுள்ளன. (WCC)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 14:00