தேடுதல்

பூமி பாதுகாப்பு சார்பாக கொரிய கத்தோலிக்கர் பூமி பாதுகாப்பு சார்பாக கொரிய கத்தோலிக்கர்  

அணுசக்தி மின் நிலையங்களை மீண்டும் துவக்க எதிர்ப்பு

அணுசக்தி நிலையங்களை மீண்டும் துவக்க அரசு முயன்று வருவதற்கு, சமுதாய, மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து, தென்கொரிய திருஅவை, தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில், மீண்டும், அணுசக்தி மின்நிலையங்களைத் துவக்குவதற்கு, அரசு திட்டமிட்டுள்ளது குறித்து, அந்நாட்டு தலத்திருஅவை, தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மின்சக்தி தேவையை நிறைவுசெய்யும் நோக்கத்துடன், அணுசக்தி மின்நிலையங்களை மீண்டும் துவக்க, அரசுத்தலைவர் Moon Jae-in அவர்களின் அரசு முயன்று வருவதற்கு, சமுதாய அமைப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தென்கொரிய திருஅவை தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

வரும் ஆண்டு, தென் கொரியாவில் இடம்பெற உள்ள அரசுத்தலைவர் தேர்தலுக்கென, இந்த அணுசக்தி மின்திட்டத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்த விரும்புவதாக குற்றஞ்சாட்டிய தலத்திருஅவை, சுற்றுச்சூழல் அமைப்பின் அதிகாரி, அருள்பணி Yang Ki-seok அவர்கள், அரசியல்வாதிகளின் இந்நடவடிக்கைகள், பொறுப்பற்றதாகவும், நாட்டின் வருங்காலத்திற்கு தீமையைக் கொணர்வதாகவும் உள்ளன என குற்றஞ்சாட்டினார்.

தென்கொரியாவின் Uljin பகுதி கடற்கரையிலுள்ள 1,400 மெகாவாட் Shin-Hanul அணுமின் நிலையத்தை மேலும் சிறப்பு பாதுகாப்பு வசதிகளுடன் அமைத்து இயக்கவேண்டுமென நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அணுசக்தி நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்திற்கு, பல்வேறு சமுதாயக் குழுக்களுடன் இணைந்து, தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது, தென் கொரிய கத்தோலிக்கத் திருஅவை.

அணுசக்தி மின்நிலையங்களை இயக்குவதற்கு எதிராக, இம்மாதம் 24ம் தேதி, போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக, சமுதாய குழுக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அமைப்புகளும் அறிவித்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 14:06