தேடுதல்

Vatican News
'அம்மானுக்கான பாலங்கள்' என பெயரிடப்பட்டுள்ள திட்டம் துவக்கப்பட்டபோது 'அம்மானுக்கான பாலங்கள்' என பெயரிடப்பட்டுள்ள திட்டம் துவக்கப்பட்டபோது  

ஈராக் அகதிகளுக்கு உதவும் கத்தோலிக்க பணித் திட்டம்

ஜோர்டன் தலைநகரில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த ஈராக் மக்களுக்கு உதவும் வகையில், இத்தாலிய ஆயர் பேரவையின் நிதியுதவியுடன், இத்தாலிய திருஇதய கத்தோலிக்க பல்கலைக்கழகம் துவங்கியுள்ள திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜோர்டனில் நுழைய முயலும் ஈராக் நாட்டின் சிறார்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மருத்துவ, மற்றும் சமூகக் கல்விப்பணிகளை வழங்கும் திட்டம் ஒன்று, ஆகஸ்ட் 13, இவ்வெள்ளியன்று, ஜோர்டன் தலைநகரில் இத்தாலிய ஆயர் பேரவையின் உதவியுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் அம்மானிலுள்ள தூய இதய மையத்தில் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்களின் முன்னிலையில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், 'அம்மானுக்கான பாலங்கள்' என பெயரிடப்பட்டுள்ளது.

இத்தாலிய ஆயர் பேரவையின் நிதியுதவியுடன், இத்தாலிய திருஇருதய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தால் எடுத்து நடத்தப்படும் இத்திட்டத்தின் வழி, புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில், ஈராக் மற்றும் ஜோர்டன், குறிப்பாக, அம்மான் நகர் ஆசிரியர்களுக்கு கல்வி பயிற்சி வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிகள், ஈராக் மற்றும் ஜோர்டன் பெண்களுக்கு நலம் சார்ந்த கல்வி, சிறார்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் என பல்வேறு நோக்கங்களைக் கொண்டு இத்தாலிய திரு இதய பல்கலைக்கழகத்தின் திட்டம் அம்மானிலிருந்து செயல்பட்டு வருகின்றது.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை பேராயத்தின் கீழ் அம்மான் நகரில் இயங்கும் கத்தோலிக்கப்பள்ளிகள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

14 August 2021, 15:23