நேர்காணல்: CCBI யின் விவிலியப் பணிக்குழு
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியா, 29 மாநிலங்களையும், 7 யூனியன் பகுதிகளையும் கொண்டிருக்கும் பெரியதொரு நாடு. இந்நாட்டில், இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கார ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகளின் 174 கத்தோலிக்க மறைமாவட்டங்கள் உள்ளன. இம்மூன்று வழிபாட்டுமுறைகளும் தனித்தனியே ஆயர் பேரவைகளையும், மூன்றும் இணைந்த ஆயர் பேரவை ஒன்றையும் கொண்டு செயல்பட்டுவருகின்றன. இந்த ஆயர் பேரவைகளில், அருள்பணியாளர், மற்றும், துறவியர், கல்வி மற்றும், கலாச்சாரம், நலவாழ்வு, பெண்கள், பொதுநிலையினர், பல்சமய உரையாடல் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு, விவிலியம் என பல்வேறு பணிக்கழுக்கள் உள்ளன. CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவின் தலைவராக, சுல்தான்பேட் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிசாமி பீட்டர் அபீர் அவர்களும், அதன் செயலராக, அருள்பணி முனைவர் இயேசு கருணாநிதி அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்பணி முனைவர் இயேசு கருணாநிதி அவர்கள், விவிலியப் பணிக்குழுவின் தோற்றம், இலக்கு, பணிகள் போன்றவை பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார்