தேடுதல்

சமூகப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. சமூகப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

நேர்காணல்: நினைவலைகளில் ஸ்டான் சுவாமி

சமூகப் போராளி ஸ்டான் சுவாமி: வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு தன் உடல்நலனைப் பற்றி அக்கறை காட்டாதவர், சொகுசுப் பயணத்தைத் தவிர்த்தவர், மற்றவரின், ஆதரவற்ற கைதிகளின் நலனில் அக்கறை காட்டியவர், தினமும் ஒரு மணி நேரம் அமைதியான முறையில் இறைவேண்டல் செய்பவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருச்சி மாவட்டத்தில், 1937ம் ஆண்டு பிறந்த, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், சமூக ஆர்வலரும், பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்தவரும் ஆவார். 2020ம் ஆண்டு அக்டோபரில், உபா எனப்படும் தீவிரவாத தடைச்சட்டத்தின்கீழ், இந்திய தேசிய புலனாய்வு முகமையால் கைதுசெய்யப்பட்டு, மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். பார்க்கின்சன்ஸ் எனப்படும் உடல்நடுக்கவாத குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டது. இறுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கொடிய சிறைச்சாலை கைதியாக, இவ்வாண்டு ஜூலை 5ம் தேதி, தனது 84வது வயதில், இறைவனடி சேர்ந்தார். ஸ்டான் சுவாமி அவர்களின் ஆத்மார்த்த நண்பரும், அவரது சிறை வாழ்வில் தொலைபேசியில் அவரோடு பலமுறை பேசியவருமான இயேசு சபை அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள், ஸ்டான் சுவாமி பற்றிய நினைவலைகளை, மதுரை இலொயோலா வெப் டிவியில் பகிர்ந்துகொண்டுள்ளார். வழக்கறிஞரான அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள், ஸ்டான் சுவாமி அவர்கள் பற்றி பகிர்ந்துகொண்ட நினைவைலைகளில் சிலவற்றை இன்று வழங்குகிறோம். அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள், பெங்களூருவிலுள்ள இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குனராவார். நீதிக்காக உயிர் நீத்த ஸ்டான் சுவாமி அவர்களும், இந்த நிறுவனத்தின் இயக்குனராக, 1975ம் ஆண்டு முதல், 1986ம் ஆண்டு வரை பணியாற்றியிருப்பவர். ஜாம்ஷெட்பூர், சாய்பாஷா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பணியாற்றியிருப்பவர், அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

நினைவலைகளில் ஸ்டான் சுவாமி

சமூகப் போராளி ஸ்டான் சுவாமி  

 • வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு தன் உடல்நலனைப் பற்றி அக்கறை காட்டாதவர்.
 • சொகுசுப் பயணத்தைத் தவிர்த்தவர்
 • நல்ல ஆடைகளை ஏழைகளுக்கே கொடுத்துவிடக் கூறியவர்
 • தளர்ந்த வயதிலும் போராட்டங்களில் கலந்துகொண்டவர்
 • நூலகம் சென்று வாசிப்பை ஊக்கப்படுத்தியவர்
 • மற்றவரின், ஆதரவற்ற கைதிகளின் நலனில் அக்கறை காட்டியவர்
 • தினமும் ஒரு மணி நேரம் அமைதியான முறையில் இறைவேண்டல் செய்பவர்
 • (வழக்கறிஞரான அருள்பணி ஜோசப் சேவியர், சே.ச.)
 • ஸ்டான் சுவாமி சே.ச.
  ஸ்டான் சுவாமி சே.ச.
26 August 2021, 14:56