தேடுதல்

மகனுக்கு ஊக்கமளிக்கும் தந்தை மகனுக்கு ஊக்கமளிக்கும் தந்தை 

மகிழ்வின் மந்திரம் : சுதந்திரம் எனும் பெரிய கொடை

நல் உணர்வு, மற்றும் மதிநுட்பத்துடன் பிரச்சனைகளை எதிர்கொள்ள, சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, கல்வியில் அடங்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "குழந்தைகளின் மேன்மைமிகு கல்வியை நோக்கி", என தலைப்பிட்டுள்ள 7ம் பிரிவில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை நாம் இப்போது சிந்தித்துவருகிறோம். இதில், 'எங்குள்ளார்கள் நம் குழந்தைகள்' என்ற உபதலைப்புடன் மூன்று பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ளவற்றில், மூன்றாவது பத்தியின் சுருக்கம் இதோ: 

முதிர்ச்சி என்பது, நமது மரபணு குறியீட்டில் ஏற்கனவே உள்ள ஒன்றிலிருந்து தொடரும் வளர்ச்சியாக இருந்தால், நம்மால் அதிகம் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், விவேகம், சரியானமுறையில் மதிப்பிடல்,  மற்றும் பொது அறிவு ஆகியவை, முற்றிலும் அளவு வளர்ச்சி காரணிகளைச் சார்ந்தது அல்ல, மாறாக, ஒவ்வொரு நபருக்குள்ளும் ஆழமாக ஒன்றிணைந்த ஒரு தொடராக வருபவைகளை, அல்லது நமது சுதந்திரத்தின் மையத்தைச் சார்ந்தது. பலவேளைகளில், ஒவ்வொரு குழந்தையும், அந்த சுதந்திரத்தில் பிறந்த நல்கருத்துக்கள், மற்றும் திட்டங்களால், நம்மை ஆச்சரியப்படுத்தும். அவ்வேளைகள், நம் சொந்த யோசனைகளை மறுபரிசீலனை செய்ய சவால்விடுப்பதாக இருக்கும். இது ஒரு நல்ல விடயமே. நல் உணர்வு, மற்றும் மதிநுட்பத்துடன் பிரச்சனைகளை எதிர்கொள்ள, சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, கல்வியில் அடங்கும். இது, அவர்களின் சொந்த வாழ்வும், சமூதாய வாழ்வும் தங்கள் கைகளில் இருப்பதையும், சுதந்திரம் ஒரு பெரிய கொடை  என்பதையும் உடனடியாக புரிந்துகொள்ளும் நபர்களை உருவாக்குவதை உள்ளடக்கியது. (அன்பின் மகிழ்வு 262)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2021, 09:52