தேடுதல்

பெண்களுக்கு எதிராக தாலிபான் சுமத்தும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக புதுடில்லியில் போராட்டம் பெண்களுக்கு எதிராக தாலிபான் சுமத்தும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக புதுடில்லியில் போராட்டம் 

ஆப்கானிஸ்தானில் ஷாரியா இஸ்லாமிய சட்டம் தரும் ஆபத்து

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான் குழுவை ஓருசில நாடுகள் அங்கீகரித்துள்ளது, அல்-கொய்தா, ISIS போன்ற தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்ற கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் அனைத்து மக்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் என அனைத்துலக சமுதாயமும் குரல் எழுப்புமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, கத்தோலிக்க உதவி நிறுவனமான ACN.

'தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவி' என்ற இந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான் குழுவை, சில நாடுகள் அங்கீகரித்துள்ளது, அல்-கொய்தா, ISIS  போன்ற தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது.

தாலிபான் இஸ்லாமியப் புரட்சியாளர்கள், ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னரே, மதஉரிமை மீறல்கள் உட்பட, பல்வேறு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை எடுத்துரைத்த ACN கத்தோலிக்க அமைப்பு, கடந்த ஆண்டு, மார்ச் 25ம் தேதி, கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்தில், அந்நாட்டின் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்திற்கு எதிராக, தாலிபான்கள் நடத்திய தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டதையும், 15 பேர் காயமடைந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தாலிபான்களின் ஆட்சியில், ஷாரியா இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிறிஸ்தவரகள், இந்துக்கள், புத்தமதத்தினர் உட்பட பல சிறுபான்மை மதத்தினரும், இஸ்லாமின் Shiite பிரிவைச் சார்ந்தவர்களும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சகிப்பற்றத்தன்மைகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது ACN கத்தோலிக்க அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2021, 14:08