தேடுதல்

ஸ்லோவாக்கியாவின் Levocaவிலுள்ள மரியன்னை திருத்தலம் ஸ்லோவாக்கியாவின் Levocaவிலுள்ள மரியன்னை திருத்தலம்  

திருத்தந்தையின் திருத்தூதுப்பயண தயாரிப்பாக 40 நாள் செப நாட்கள்

செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, 40 நாள் இறைவேண்டல் நாள்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு தயாரிப்பாக, 40 நாள் இறைவேண்டல் நாட்களை துவக்கவுள்ளது, அந்நாட்டு தலத்திருஅவை.

செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்கு மக்களைத் தயாரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 7ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி முடிய, 40 நாட்கள் இறைவேண்டல் நாட்களாக அறிவித்துள்ளது, அந்நாட்டில் செயலாற்றும் திருப்பீட மறைப்போதகப்பணி அமைப்பு.

இந்த 40 நாட்களும் ஒவ்வொரு விசுவாசியும் கோவிலிலோ, தங்கள் இல்லத்திலோ, சமுதாயக் குழுக்களிலோ, செபமாலை செபித்து, இந்த திருத்தூதுப் பயணத்திற்கு தயாரிக்கும் அதேவேளை, இந்த ஆன்மீக விருந்து தயாரிப்பில், அனைத்து நல்மனம் உடையவர்களும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.

நம் வாழ்வுப் பயணத்தில் இயேசுவின் இடத்தையும், அவரைப் பின்பற்றுவதில் அன்னை மரியா, மற்றும், புனித யோசேப்பின் வழிகாட்டுதலையும் மனதில்கொண்டு, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்துக்காக நம்மமையே தயாரிப்போம் என, சுலோவாக்கியா ஆயர்கள், விசுவாசிகளிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 15:13