தேடுதல்

இந்தியாவில் தேசிய நீதி நாள், ஜூலை 28  இந்தியாவில் தேசிய நீதி நாள், ஜூலை 28  

நேர்காணல்: இந்தியாவில் தேசிய நீதி நாள், ஜூலை 28

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் நீதிக்கான குரலை முன்னெடுத்தார். அவர் நீதியின் விதையை விதைத்துச் சென்றுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

84வது வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விசாரணைக்கு உட்பட்ட கைதியாக, இம்மாதம் 5ம் தேதி, இறையடி சேர்ந்தார்.  பழங்குடிகள் மற்றும், தலித் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த அவரது இறப்பு, ஒட்டுமொத்த இந்தியாவின் நீதிகேட்கும் குரல்களை வலிமைப்படுத்தியுள்ளது. இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் நீதிக்கான குரலை முன்னெடுத்தார். அவர் நீதியின் விதையை விதைத்துச் சென்றுள்ளார். இந்திய இயேசு சபை துறவியரின் வழிநடத்துதலில், ஜூலை 28, இப்புதனன்று இந்தியா முழுவதும் தேசிய நீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு சபை அருள்பணி ஜார்ஜ் ஸ்டீபன் தைரியம் அவர்கள், அந்த நீதி நாள் பற்றி இன்று விளக்குகிறார். இவர், மதுரை மறைமாநில இயேசு சபையின் வளர்ச்சித்திட்ட இயக்குனர் ஆவார்

நேர்காணல்: இந்தியாவில் தேசிய நீதி நாள், ஜூலை 28

 

29 July 2021, 14:24