தேடுதல்

Vatican News
 அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச.  அவர்களுக்கு இரங்கல் அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அவர்களுக்கு இரங்கல்   (AFP or licensors)

நேர்காணல்: சமூகப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி - பகுதி 1

இந்தியாவின் பழங்குடியினரோடு இணைந்து, அருள்பணி ஸ்டான் அவர்களின் மறைவுக்கு வருந்தும் இவ்வேளையில், அவர் நிறுவவிழைந்த நீதியான சமுதாயத்திற்காக உழைக்க நாம் அனைவரும் நம்மையே அர்ப்பணிப்போம் - கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 05, இத்திங்களன்று, மும்பையில் இறைபதம் சேர்ந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில், தங்களின் அடிப்படை உரிமைகள் இழந்துள்ள பழங்குடியின மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர். பிறர்க்கெனவே வாழ்ந்த இந்த சிறைப் பறவையோடு ஏறத்தாழ 32 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருப்பவர், இயேசு சபை அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள். உரோம் உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், சமுதாய நீதி, மற்றும், சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனராக பணியாற்றிவரும் இவர், அருள்பணி ஸ்டான் சுவாமி  அவர்கள், தன் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

நேர்காணல்: சமூகப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி - பகுதி 1

 

08 July 2021, 14:30