தேடுதல்

Manhattan தம்பதியர் Manhattan தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம்: திருமண வாழ்வில் பிரமாணிக்கமாய் இருப்பதன் பலன

அனுபவம்மிக்க தம்பதியர், தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதில் அகமகிழ்கின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புதிதாகத் திருமணம் புரிந்த இளம் தம்பதியர், தங்களின் துவக்ககால திருமண வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மனத்தளர்வுகள், இன்னல்கள் போன்றவற்றுக்கு மத்தியில், அன்பில் வளர்வது, காலப்போக்கில் நிறையப் பலன்களைத் தருகின்றது.  அந்த அன்பு, சுவையான திராட்சை இரசத்தைப் போன்றது. நல்ல, சுவையான திராட்சை குறித்த காலம் வரும்போது பலன்தருவதுபோன்று, இளம் தம்பதியரின் பிரமாணிக்கமான வாழ்வும், பிற்காலத்தில் சுவையான பலன்களைத் தருகிறது. பிரமாணிக்கத்தால் தினமும் கிடைக்கும் அனுபவம், திருமண வாழ்வுக்கு, வளமை சேர்க்கின்றது. பிரமாணிக்கம் என்பது, பொறுமை, மற்றும், எதிர்பார்ப்போடு தொடர்புடையது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், தியாகமும், திருமண வாழ்வில் ஆண்டுகள் செல்லச் செல்ல, கனிகளைத் தருகின்றன. அனுபவம்மிக்க தம்பதியர், தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதில் அகமகிழ்கின்றனர். புதுமணத் தம்பதியர், தங்களின் துவக்ககால வாழ்விலிருந்தே அன்புகூர்ந்து வருவது, அவர்கள் தங்கள் வாழ்வு, நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு, புதியதாய், பக்குவம்மிக்கதாய் மாறிவருவதை உணர்வார்கள். திருமண வாழ்வில் அனுபவமிக்க தம்பதியருக்கு, வெளிப்புற, சக்திமிக்க உணர்ச்சிகள் மற்றும், உந்துதல், துச்சமாகத் தெரியும். மாறாக, அவர்கள், தங்களின் முதிர்ந்த வயதின், மற்றும், உள்ளாழத்தில் சேமித்துவைத்துள்ள அன்பின் திராட்சை இரசத்தின் இனிமையைச் சுவைப்பார்கள். இத்தகைய தம்பதியர், சவால்களிலிருந்து தப்பிக்காமல் அல்லது, சிக்கல்களை மறைத்து வைக்காமல், நெருக்கடிகள் மற்றும், கஷ்டங்களை வெற்றிகரமாகச் சமாளிக்கின்றவர்கள்.    

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 231ம் பத்தியில், புதிதாகத் திருமணம் புரிந்த இளம் தம்பதியர், தங்களின் துவக்ககால திருமண வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள், அன்பிலும், பிரமாணிக்கத்திலும் வளர்கையில், நாளடைவில் அவர்கள் அனுபவிக்கும் பலன்கள் பற்றி கூறியிருக்கிறார்.

29 July 2021, 14:16