தேடுதல்

கோவிட்-19 சூழலில் பாகிஸ்தான் பள்ளிகள் கோவிட்-19 சூழலில் பாகிஸ்தான் பள்ளிகள் 

கிறிஸ்தவக் கல்லூரியை அரசுடமையாக்கும் பாகிஸ்தான்

கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றை அரசுடமையாக்குவது, பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி மட்டுமல்ல, சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

பாகிஸ்தானில் 160 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் கிறிஸ்தவ சபையால் நடத்தப்பட்டுவந்த கல்லூரி ஒன்றை, அரசே எடுத்து நடத்த உள்ள தீர்மானத்திற்கு அந்நாட்டு கிறிஸ்தவ ஆயர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலுள்ள பெஷாவரின் (Peshawar) Edwardes கல்லூரியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் இம்மாதம் 3ம் தேதி, தீர்ப்பு வழங்கியது குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆயர்கள், இது பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி மட்டுமல்ல, சிறுபான்மையினருக்கு, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும் என கூறியுள்ளனர்.

இக்கல்லூரியை பாகிஸ்தான் கிறிஸ்தவ சபையிடமே மீண்டும் ஒப்படைக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உரைத்த, பெஷாவர் கிறிஸ்தவ ஆயர் Humphery Peters அவர்கள், பாகிஸ்தானின் முக்கிய நகர்களில் இது குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிறிஸ்தவ சபையின் மறைப்பணிக் கழகத்தால் 1853ம் ஆண்டு Edwardes கல்லூரி துவக்கப்பட்டு நடத்தப்பட்டுவந்த நிலையில், 2014ம் ஆண்டு, அமெரிக்க மறைபோதகர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரசசனைகள் தலைதூக்கின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2021, 15:48