தேடுதல்

Vatican News
மியான்மாரில் எதிர்ப்புப் போராட்டங்கள் மியான்மாரில் எதிர்ப்புப் போராட்டங்கள்  (AFP or licensors)

மியான்மாரின் அமைதிக்கு புத்த மதத்தினர், கத்தோலிக்கர்

மியான்மாரில் இராணுவத்திற்கு எதிராகப் போராடிவரும் மக்கள், அச்சமூட்டும் அடக்குமுறை, மற்றும், வன்முறையை எதிர்கொள்கின்றனர் - அருள்பணி Criveller

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் கத்தோலிக்கர், புத்தமதத்தினரோடு இணைந்து, சுதந்திரம், மற்றும், அமைதிக்காக குரல் எழுப்புவது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று, அந்நாட்டு மறைப்பணியாளர் ஒருவர் கூறினார்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி தொடங்கியதிலிருந்து இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் மீது இராணுவம் நடத்திவரும் அடக்குமுறைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரின் விசுவாச அறிக்கை, துணிவுள்ள சான்று, மறைசாட்சியம் ஆகியவற்றை காண முடிகின்றது என்று, PIME எனப்படும், பாப்பிறை வெளிநாட்டு மறைப்பணி சபையின்

அருள்பணியாளர் Gianni Criveller அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரில் இராணுவத்திற்கு எதிராகப் போராடிவரும் மக்கள், அச்சமூட்டும் அடக்குமுறை, மற்றும், வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், நம்பிக்கையை அறிக்கையிடுவதற்கு மியான்மார் திருஅவைக்கு நல்லதொரு நேரம் கிடைத்துள்ளது என்றும், ACI கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார், அருள்பணி Criveller.

இராணுவத்தின் அடக்குமுறையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகளில், கத்தோலிக்கரும் உள்ளடங்குவர் என்றும், மியான்மாரில் கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும், மனித மாண்பு, மனசாட்சியின் சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்துவதில், அவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர் என்றும், அருள்பணி Criveller அவர்கள் கூறியுள்ளார்

மியான்மாரில், PIME மறைப்பணியாளர்கள் 1868ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர். (UCAN)

25 June 2021, 15:50