தேடுதல்

பீரங்கி குண்டால் தாக்கப்பட்ட இளம் வீரர் இக்னேசியஸ் பீரங்கி குண்டால் தாக்கப்பட்ட இளம் வீரர் இக்னேசியஸ் 

நேர்காணல்: "இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டு

கிறிஸ்துவில் அனைத்தையும் புதிதாய்க் காண.... என்ற தலைப்பில், "இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டு கொண்டாடப்பட்டுவருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, இயேசு சபையை தோற்றுவித்த, புனித லொயோலா இக்னேசியஸ் மனமாற்றம் அடைந்ததன் 500ம் ஆண்டை, "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டாக, உலகளாவிய இயேசு சபையினர் சிறப்பித்து வருகின்றனர். இனிகோ என அழைக்கப்படும் இவர், இளம் வீரராக, இஸ்பெயின் நாட்டின் பாம்பலோனா கோட்டையைக் காக்க, போரில் ஈடுபட்டிருந்த வேளையில், 1521ம் ஆண்டு, மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில், மாபெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. அந்நிகழ்வு இடம்பெற்றதன் 500ம் ஆண்டு, இவ்வாண்டு மே 20ம் தேதி, உலகெங்கும் வாழும் இயேசு சபையினரால் சிறப்பிக்கப்பட்டது. மேலும், அந்நிகழ்வு, "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு வருகிறது. “கிறிஸ்துவில் அனைத்தையும் புதிதாய்க் காண...” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டுவரும் இந்த சிறப்பு ஆண்டு, 2022ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவுபெறும். இந்த சிறப்பு ஆண்டு பற்றி, இயேசு சபை அருள்பணி தே.அந்தோணி இனிகோ அவர்கள், வாட்சப் ஊடகம் வழியாக இன்று வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு விளக்குகிறார். இவர், திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில், நவதுறவு இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.

நேர்காணல்: "இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டு
03 June 2021, 14:52