தேடுதல்

இரஷ்யாவில் உயிர்ப்புப் பெருவிழா இரஷ்யாவில் உயிர்ப்புப் பெருவிழா 

கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களோடு ஒருமைப்பாடு

அனைவரும், மனித உடன்பிறந்தஉணர்வோடு இறைவேண்டல் செய்து, ஒருவர் ஒருவருக்கு நம்பிக்கையின் அடையாளங்களைக் கொணருமாறு அழைப்பு – பிரெஞ்சு ஆயர் Gollnisch

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலத்தீன் வழிபாட்டுமுறை மற்றும், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் பிணைப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்கர், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களோடு ஒருமைப்பாடு என்ற ஒரு நாளைச் சிறப்பிக்கின்றனர்.

Oeuvre d'Orient எனப்படும் பிரெஞ்சு கத்தோலிக்க அமைப்பு, மே 09, இஞ்ஞாயிறன்று, கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களோடு ஒருமைப்பாடு என்ற, உலக நாளை, நான்காவது முறையாகச் சிறப்பிக்கின்றது.

இந்த உலக நாளுக்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, Oeuvre d'Orient அமைப்பின் தலைவர் ஆயர் Pascal Gollnisch அவர்கள், அனைவரும், மனித உடன்பிறந்த உணர்வோடு இறைவேண்டல் செய்து, ஒருவர் ஒருவருக்கு நம்பிக்கையின் அடையாளங்களைக் கொணருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களின் வரலாறு, நமது கலாச்சாரத்தின் வரலாறு என்றும், எகிப்தியர், மெசபத்தோமியர், கிரேக்கர், உரோமையர் ஆகியோரின் கலாச்சாரம் இன்றி, ஐரோப்பா தனது தனித்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியாது என்றும், ஆயர் Gollnisch அவர்கள் கூறியுள்ளார்.

இந்த உலக நாளில், அர்மேனிய, காப்டிக், கல்தேய, எத்தியோப்பிய, எரிட்ரிய, கிரேக்க மெல்கித்தே, மாரனைட், சிரிய, சீரோ மலபார், சீரோ மலங்கரா ஆகிய கத்தோலிக்க திருஅவைகள் உட்பட, கத்தோலிக்கர் அனைவரும், உரோம் ஆயரான திருத்தந்தையோடு ஒன்றித்து, கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களோடு இறைவேண்டலில் பங்குபெற அழைக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. 

உலகின் பல நாடுகளில், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் பலர், இன்றும் நசுக்கப்படுகின்றனர், மற்றும், தங்களின் வாழ்க்கைக்காகப் போராடிவரும்வேளை, கத்தோலிக்கருக்கும், கீழை கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பிணைப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

L’Oeuvre d'Orient அமைப்பு, இந்தியா, மத்தியக் கிழக்கு, ஆப்ரிக்காவின் கொம்பு, மற்றும், கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளின் 23 நாடுகளில் 160 ஆண்டுகளுக்கு மேலாக உதவி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2021, 15:34