தேடுதல்

Vatican News
இயேசு, தம் சீடர்களுக்குச் செபிக்க கற்றுக்கொடுக்கிறார் இயேசு, தம் சீடர்களுக்குச் செபிக்க கற்றுக்கொடுக்கிறார் 

”அப்பா பிதாவே” பாடல் புனைந்த அனுபவப் பகிர்வு

இயேசு சபை அ.பணி X. சவரிமுத்து அவர்கள், கனவு கண்டேன், அம்மா கற்றுத்தா போன்ற பாடல்களையும் இயற்றி பாடியும் இருப்பவர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள் என்று, இறைமகன் இயேசு, தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த, தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!... எனத் தொடங்கும் இறைவேண்டலை, அப்பா பிதாவே என்ற பாடலாக, பல ஆண்டுகளாக, நாம் பாடி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வருகிறோம். இப்பாடலை எழுதி இசையமைத்து, தன் குரலிலே முதலில் பாடியிருப்பவர், இயேசு சபை அருள்பணி X. சவரிமுத்து (மே28,1937-மார்ச்03,2021) அவர்கள். இவர், இப்பாடல் தன்னில், உருவான அனுபவம் பற்றி, மதுரை இலொயாலா வெப் டிவி இயக்குனர் இயேசு சபை அருள்பணி சேவியர் அந்தோனி அவர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்ப்புப் பெருவிழா கொடையாக, அந்த நேர்காணலை, வலைக்காட்சியில் வெளியிட்டுள்ளார், இயேசு சபை அருள்பணி சேவியர் அந்தோனி அவர்கள். இயேசு சபை அ.பணி X. சவரிமுத்து அவர்கள், கனவு கண்டேன், அம்மா கற்றுத்தா போன்ற பாடல்களை இயற்றி பாடியும் இருப்பவர். இயேசு சபையில் 59 ஆண்டுகள் துறவியாக வாழ்ந்த இவர், ஓர் ஆன்மீகச் சிந்தனையாளர். இவர், அருங்கொடை இயக்க தியானங்கள், மற்றும், புனித இஞ்ஞாசியார் ஆன்மீகத் தியானங்களை, இருபால் துறவியருக்கும், பொதுநிலையினருக்கும் வழங்கியிருப்பவர். இயேசு சபை அருள்பணி X. சவரிமுத்து  அவர்கள். தனது 83வது வயதில், இவ்வாண்டு மார்ச் மாதம் 3ம் தேதி இறைபதம் சேர்ந்தார்

”அப்பா பிதாவே” பாடல் புனைந்த அனுபவப் பகிர்வு
08 April 2021, 14:37