தேடுதல்

வட கொரியாவில் கோவிட்-19 சூழல் வட கொரியாவில் கோவிட்-19 சூழல் 

திருத்தூதுப் பயணம், கொரியா தீபகற்பத்திற்கு அமைதி..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட கொரியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்காக இறைவேண்டல் இயக்கம் - தென் கொரியா கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டால், அப்பயணம், வட மற்றும், தென் கொரிய நாடுகளுக்கு இடையே உறவுகள் மேம்பட உதவும் என்று, தென் கொரியா கத்தோலிக்கத் திருஅவை தலைவர்கள் கூறியுள்ளனர்.

திருத்தந்தை, வட கொரியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்காக, இறைவேண்டல் இயக்கம் ஒன்றைத் துவக்கியுள்ள தென் கொரிய திருஅவைத் தலைவர்கள், இத்திருத்தூதுப் பயணம், கொரிய தீபகற்பத்தில் அமைதி நடவடிக்கைகளையும், தேசிய ஒப்புரவையும் ஊக்குவிக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டால், அப்பயணம், வடகிழக்கு ஆசியாவில் அமைதி நிலவ உந்துசக்தியாக அமையும் என்று, வத்திக்கானுக்கு தென் கொரியா தூதராகப் பணியாற்றிய, Lee Min-baek அவர்கள் கூறியுள்ளார்.

இரு கொரியா நாடுகளுக்கு இடையே அமைதியையும், இவ்விரு நாடுகளின்  ஒன்றிணைப்பையும் ஊக்குவிப்பதற்கு உழைத்துவரும், தென் கொரிய ஆயர் பேரவையின் பணிக்குழு, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, Lee அவர்கள், இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

திருத்தந்தை மற்றும், திருப்பீடத்தின் வெளியுறவு கொள்கையும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் ஒன்றிணைந்தால், கொரிய தீபகற்பம் உட்பட, வடகிழக்கு ஆசியாவில் அமைதியை உருவாக்க மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றும், Lee அவர்கள், அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2021, 15:23