தேடுதல்

Vatican News
புனித வியாழன் புனித வியாழன்  

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி

ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். (யோவா.13: 14-15)

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி

ஏப்ரல் 01, இவ்வியாழன், இந்த 2021ம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான வியாழன். பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் என்றழைக்கப்படும் இந்த வியாழன், திருஅவையின் வரலாற்றில் மிகவும் சிறப்புமிக்க நாள். ஏனென்றால், இந்த நாளில்தான் ஆண்டவர் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தியது, அவர், தன் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவியது, அவர் திருநற்கருணையை ஏற்படுத்தியது ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன. இந்த புனித நாள் பற்றிய தன், சிந்தனைகளை இன்று வழங்குகிறார், அருள்பணி மார்ட்டின் சூசை ராஜ் அவர்கள். இவர், தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் ஆயர் இல்ல நிர்வாகியாவார். 

இந்த புனித வியாழன், ஆங்கிலத்தில் Maundy Thursday என்று அழைக்கப்படுகிறது. Maundy என்ற சொல், கட்டளை என்று பொருள்படும் "Maundatum" என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பிறப்பது. ஆண்டவர் இயேசு நமக்கு மிகப்பெரும் மூன்று கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். ஒன்று, அன்புக் கட்டளை. இரண்டாவது, திருநற்கருணையில் கடவுளின் அன்பை நினைவுகூர விடுக்கும் கட்டளை. மூன்றாவது, நமக்காகப் பலியான இயேசுவின் அருள்பணித்துவத்தில் தொடர்ந்து பங்குகொள்ள விடுக்கும் கட்டளை. ஆண்டவரின் இந்த மூன்று கட்டளைகளை இந்த புனித வியாழன் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இறைவனிடமிருந்து அன்பைப் பெறுகின்ற நாம், அதை ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதே, அவரின் அன்புக் கட்டளையின் நோக்கம். கோவிட்-19 உலகப் பெருந்தொற்று காலத்தில், தனிமையில், ஏழ்மையில், துயரில் வாடுகின்ற பலரோடு நம் உடன்பிறந்த அன்புணர்வைப் பகிர்ந்துகொள்வோம். இயேசுவின் அன்புக்கட்டளையை செயல்படுத்தும் மக்களாக வாழ்வோம்.

புனித வியாழன்
புனித வியாழன்
01 April 2021, 09:23