தேடுதல்

Vatican News
கத்தோலிக்க தலைமைத்துவம் மையம், சிங்கப்பூர் கத்தோலிக்க தலைமைத்துவம் மையம், சிங்கப்பூர் 

இயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்

ஏறத்தாழ 56 இலட்சம் மக்களைக்கொண்ட, பல இனம் மற்றும், பல மதங்களைக்கொண்ட சிங்கப்பூரில், ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிங்கப்பூரில், கத்தோலிக்க இளையோர் குழு ஒன்று, இயேசுவின் தலைமைத்துவம் போன்றதொரு தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கத்தோலிக்க தலைமைத்துவம் (CLC) என்ற மையம், பணிபுரியவே வந்தேன் என்றுரைத்த இயேசுவின் “பணியாள் தலைமைத்துவத்தை” ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், சிங்கப்பூரில் கத்தோலிக்கத் தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

உயிரூட்டமுள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஆர்வமுள்ள, மற்றும், மறைப்பணி திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கு, உயிர்த்துடிப்புமிக்க பொதுநிலை மறைப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், இவ்வாறு தலைவர்களை உருவாக்குவதே, இந்த மையத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று என்றும், இம்மையத்தின் தலைவர் Gerard Lee அவர்கள் கூறியுள்ளார்.

32 பங்குத்தளங்களைக் கொண்ட சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தில் 3,60,000 கத்தோலிக்கர் உள்ளனர்.

பல இனம் மற்றும், பல மதங்களைகச்சார்ந்த, ஏறத்தாழ 56 இலட்சம் மக்களைக்கொண்ட சிங்கப்பூரில், ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். அந்நாட்டில் வாழ்கின்ற சீனர்களில் பெரும்பான்மையினோர், புத்த மதத்தினர். பெரும்பான்மை மலாய் இனத்தவர், முஸ்லிம்கள். (UCAN)

06 April 2021, 15:34