தேடுதல்

திருமணம் எனும் அருளடையாளம் திருமணம் எனும் அருளடையாளம் 

மகிழ்வின் மந்திரம்: தம்பதியர் அன்பில் ஒன்றித்திருப்பதன் பயன்கள்

தம்பதியர் அன்பில் ஒன்றித்திருப்பதன் வழியாக, அவர்கள், தந்தைமை மற்றும், தாய்மையின் அழகை அனுபவிக்கின்றனர் (அன்பின் மகிழ்வு 88)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், மூன்றாம் பிரிவில், “திருஅவையும் குடும்பமும்” (86-88) என்ற துணைதலைப்பில் மூன்று பத்திகளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் 88ம் பத்தியில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள்...

குடும்பங்களில் அனுபவிக்கப்படும் அன்பு, திருஅவையின் வாழ்வுக்கு, வலிமையின் வற்றாத ஊற்றாக உள்ளது. திருமணத்தில் தம்பதியர் ஒன்றிணைவது, திருமண அன்பு வளரவும், ஆழப்படவும், இடைவிடாமல் அழைப்பு விடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. தம்பதியர் அன்பில் ஒன்றித்திருப்பதன் வழியாக, அவர்கள், தந்தைமை மற்றும், தாய்மையின் அழகை அனுபவிக்கின்றனர். அதோடு, அவர்கள், தங்களின் திட்டங்கள், சோதனைகள், எதிர்பார்ப்புகள், அக்கறைகள் ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றனர்.  அவர்கள், ஒருவர் ஒருவர் மீது அக்கறை கொள்வதற்கும், ஒருவர் ஒருவரை மன்னிப்பதற்கும் கற்றுக்கொள்கின்றனர். இந்த அன்பில் அவர்கள், தங்களின் மகிழ்வான தருணங்களைக் கொண்டாடுகின்றனர், மற்றும், தங்கள் வாழ்வின் கடினமான கட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உள்ளனர். தம்பதியர், எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒருவர் ஒருவருக்கு தங்களையே கொடையாக வழங்குதலின் அழகு, குழந்தை பிறப்பிலிருந்து வருகின்ற மகிழ்வு, சிறுபிள்ளைகள் முதல், வயதில் மூத்தவர்கள் வரை, அனைத்து குடும்ப உறுப்பினர்களையும், அன்போடு பராமரிப்பது ஆகியவை, குடும்பத்தின் அழைப்புக்குப் பதில் அளிப்பதை தனித்துவமிக்கதாகவும், ஈடுசெய்யமுடியாததாகவும், திருஅவைக்கும், சமுதாயம் முழுவதற்கும் ஆக்குகின்ற பலன்களில் வெகு சிலவே. (அன்பின் மகிழ்வு 88) 

22 April 2021, 11:29