தேடுதல்

ஹங்கேரி நாட்டில் புத்தாண்டில் பிறந்த குழந்தை ஹங்கேரி நாட்டில் புத்தாண்டில் பிறந்த குழந்தை 

மகிழ்வின் மந்திரம்: குழந்தை, தம்பதியரின் அன்பினாலே பிறக்க...

கடவுள், குழந்தைவரம் கொடுக்காத தம்பதியர், தங்களின் திருமண வாழ்வை, மனித மற்றும், கிறிஸ்தவப் பண்புகளில், முழுமையான அர்த்தத்துடன் வாழலாம். (அன்பின் மகிழ்வு 80)

மேரி தெரேசா: வத்திக்கான் 

இக்காலத்திய நவீன கலாச்சாரத்தில், உறுதியான திருமண வாழ்வும், கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பும், பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவற்றுக்குத் தீர்வுகாணும் வழிமுறைகளை தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் வழங்கியுள்ளார். “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” (58-88) என்ற, அம்மடலின் மூன்றாம் பிரிவின், ஐந்தாவது பகுதி, “வாழ்வை வழங்குதல், மற்றும், பிள்ளைகள் வளர்ப்பு” (80-85),  என்ற தலைப்பில் துவங்குகின்றது. அதன் முதல் இரு பத்திகளில் (80,81) திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள்...

திருமணம் என்பது, முதலில், வாழ்வு, மற்றும், அன்பில், மிகநெருங்கிய முறையில் பங்குகொள்வதாகும். இது தம்பதியருக்கு நன்மைதரவல்லது. அதேநேரம், பாலியல் உறவு, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயுள்ள திருமண அன்புக்கு ஆணையிடுவதாகும். கடவுள், குழந்தைவரம் கொடுக்காத தம்பதியர், தங்களின் திருமண வாழ்வை மனித மற்றும், கிறிஸ்தவப் பண்புகளில் முழுமையான அர்த்தத்துடன் வாழலாம். எனினும், திருமணப் பிணைப்பு, தன் இயல்பிலே, குழந்தைகளைப் பெற்றெடுக்க வைப்பதாகும். தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை, அவர்கள் ஒருவர் ஒருவருக்கு வழங்கும் அன்பின் கனியாகும். ஒரு குழந்தை, அத்தகைய அன்பினால் பிறப்பதற்கே தகுதியுடையது. மற்ற வழிகளில் அல்ல. ஏனெனில், பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ, அது, ஏதோ ஒன்றிற்குச் சொந்தமல்ல, மாறாக, அது ஒரு கொடையாகும். அக்குழந்தை, பெற்றோரின் திருமண அன்பின் குறிப்பிட்ட செயலின் கனியாகும். இது படைப்பின் துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. படைப்பின் நியதிப்படி, ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும், இடையேயுள்ள திருமண அன்பு, மற்றும், வாழ்வை வழங்குதல் ஆகியவை, ஒருவர் மற்றவருக்கு கட்டளையிடப்படுகின்றது(காண்க.தொ.நூ.1:27-28). இவ்வாறு படைத்தவர், தம் படைப்புப் பணியைப் பகிர்ந்துகொள்வதற்காக, அவர் ஆணையும் பெண்ணையும் படைத்தார். அதேநேரம், அவர்களை தம் அன்பின் கருவிகளாக்கினார். மனித வாழ்வை வழங்குவதன் வழியாக, வருங்கால மனித குலத்திற்குப் பொறுப்பேற்பதையும் அவர்களிடம், அவர் ஒப்படைத்தார். (அன்பின் மகிழ்வு 80, 81)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2021, 14:49