தேடுதல்

ஒரு குடும்பத்துடன் திருத்தந்தை ஒரு குடும்பத்துடன் திருத்தந்தை 

மகிழ்வின் மந்திரம்:இயேசுவால் மீட்கப்பட்ட திருமணமும், குடும்பமும்

இறை அன்பிற்கு சான்றுகளாக இருப்பதற்கும், ஒன்றிப்பில் வாழ்வதற்கும் தேவையான அருளை, தன் திருஅவையின் வழியாக, இயேசு பொழிகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தை மையப்படுத்தி வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின் 63வது பத்தியில் அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ..

அனைத்தையும் தன்னில் ஒப்புரவாக்கிய இயேசு, திருமணத்தையும் குடும்பத்தையும் அதன்  மூலமுதலான படிவத்திற்கு மீண்டும் கொணர்ந்தார் (மத் 10:1-12). திருமணமும் குடும்பமும் அவரால் மீட்கப்பட்டன (எபே. 5:21-32), மற்றும், தூய மூவொரு கடவுளின் சாயலில் மீள்கட்டமைக்கப்பட்டன. ஏனெனில், இம்மறையுண்மையிலிருந்துதான், உண்மை அன்பு வழிந்தோடுகின்றது. படைப்பில் தன் துவக்கத்தைக் கொண்டு, மீட்பு வரலாற்றில்  வெளிப்படுத்தப்பட்ட தம்பதியருக்கிடையேயான உடன்படிக்கை, தன் முழு அர்த்தத்தை கிறிஸ்துவிலும், அவரின் திருஅவையிலும் பெறுகிறது. இறை அன்பிற்கு சான்றுகளாக இருப்பதற்கும், ஒன்றிப்பில் வாழ்வதற்கும் தேவையான அருளை, தன் திருஅவையின் வழியாக, இயேசு, திருமணத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் பொழிகிறார். குடும்பத்தின் நற்செய்தி உலக வரலாறு முழுவதும்  பரந்து விரிந்துள்ளது, அதாவது, ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து இடம்பெறும் இறுதி நாளில் கிறிஸ்துவுடன் உருவாகும் உடன்படிக்கை எனும் மறையுண்மையின் நிறைவு வரை (தி.வெ. 19:9).

24 March 2021, 16:17