கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தை மையப்படுத்தி வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின் 59வது பத்தியில் அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ..
திருமணம் மற்றும் குடும்பம் குறித்த நம் படிப்பினைகள், அன்பாலும், மென்மை உணர்வுகளாலும் தூண்டப்பட்டதாகவும், அவைகளால் மாற்றம் பெறுவதாகவும் இருக்கவேண்டும். இல்லையெனில், நம் படிப்பினைகள் எல்லாம், வறட்சியான, உயிரற்ற நன்னெறிக்கோட்பாடுகளை பாதுகாப்பதாக மட்டும் மாறிவிடும். கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட இறைத்தந்தையின் அளவற்ற அன்பின் ஒளியில் மட்டுமே, கிறிஸ்தவ குடும்பத்தின் மறையுண்மையை முற்றிலுமாக புரிந்துகொள்ள முடியும். கிறிஸ்து தன்னையே நமக்காக கையளித்ததுடன், இன்றும் நம்மிடையே தொடர்ந்து இருந்து வருகிறார். எண்ணற்ற அன்புக் கதைகளின் இதயமாக இருக்கும், வாழும் கிறிஸ்துவை நோக்கி என் பார்வையை திருப்பி, உலகின் அனைத்துக் குடும்பங்கள் மீதும், தூய ஆவியாரின் அனல்பொறி பொழியப்படவேண்டும் என வேண்டுகிறேன் (அன்பின் மகிழ்வு 59)