தேடுதல்

Vatican News
காங்கோவில் காரித்தாஸ் அமைப்பினரின் பணிகள் காங்கோவில் காரித்தாஸ் அமைப்பினரின் பணிகள் 

செவித்திறனற்ற சிறார்க்கென, காங்கோவில் காரித்தாஸ் கல்விக்கூடம்

எந்த ஒரு குறைபாடும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டதாக 'நம்பிக்கை' என பெயரிடப்பட்டுள்ள கல்வி நிலையம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செவித்திறனற்ற இளம் சிறார்களுக்கென, கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் நிதியுதவியோடு காங்கோ ஜனநாயக குடியரசில் கல்விக்கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

காங்கோ குடியரசின் Matadi மறைமாவட்டத்தில் ஆஸ்திரிய காரித்தாஸ் அமைப்பின் நிதியுதவியுடன் திறக்கப்பட்டுள்ள இந்த கல்வி நிலையம், செவித்திறனற்ற மாணவர்களுக்கு புதிய நம்பிக்கைகளை வழங்குவதாக உள்ளது.

பாத்திமா மரியன்னை பங்குதளத்தோடு இணைக்கப்பட்டுள்ள இந்த கல்விக்கூடம், தேசிய சிறப்புக் கல்விக்கான துறையின் ஒரு பகுதியாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

எந்த ஒரு குறைபாடும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டதாக 'நம்பிக்கை'  என பெயரிடப்பட்டுள்ள இந்த கல்வி நிலையத்தை Matadi ஆயர் Daniel Nlandu அவர்கள் திறந்து வைத்தார்.

ஏழைகள், கைவிடப்பட்டோர், மற்றும் நலிவடைந்தோரின் சார்பாக திருஅவை ஆற்றிவரும் பணிகளின் ஒரு பகுதியாக இந்த செவித்திறனற்றோருக்கான கல்விநிலையம் காங்கோ குடியரசில் திறக்கப்பட்டுள்ளது.

22 February 2021, 14:44