தேடுதல்

நோயுற்றோருக்கு ஆறுதலாக... நோயுற்றோருக்கு ஆறுதலாக... 

கருணைக்கொலைக்கு எதிராக அயர்லாந்து ஆயர்கள்

அயர்லாந்து ஆயர்கள் : கருணைக் கொலைக்கு உதவுவது என்பது, சமுதாயத்தில், கருணை, அறவே இல்லாமல் போனதை, வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மருத்துவர்கள் உதவியுடன் கருணைக் கொலையை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கும் அயர்லாந்தின் சட்ட முன்வரைவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அயர்லாந்து கத்தோலிக்க ஆயர்களும், மனித உரிமை ஆர்வலர்களும்.

'மாண்புடன் உயிரிழத்தல் 2020', என்ற சட்ட முன்வரைவு குறித்து, சில அரசியல் கடசிகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளபோதிலும், இது, தவறாக பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவான வாய்ப்புக்களை தடைச்செய்யும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அயர்லாந்தின் மனித உரிமைகள் அமைப்பு.

இயலா நிலையில் இருக்கும் மக்களை மரணத்துக்குள்ளாக்கும் அதேவேளை, தற்கொலைகளுக்கு ஆதரவளிக்கும் இந்த முன்வரைவு குறித்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ள அயர்லாந்து ஆயர்கள், தற்கொலைக்கு உதவுவது என்பது, சமுதாயத்தில், கருணை, அறவே இல்லாமல் போனதை, வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இறக்கும் நிலையில் இருப்போருக்கு உதவும் வகையில், அயர்லாந்தில் சட்டங்கள் இருப்பினும், தற்போதைய புதிய சட்ட முன்வரைவு, மரணத்திற்கு உதவுவதாகவும், அதனை விரைவுபடுத்த மருத்துவ உதவிகள் ஆற்றுவதாகவும் உள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர், அயர்லாந்து ஆயர்களும், மனித உரிமை அமைப்புக்களும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2021, 14:55