தேடுதல்

Vatican News
திருநீற்றுப் புதன் திருப்பலியில் சாம்பலைப் பெறும் விசுவாசி திருநீற்றுப் புதன் திருப்பலியில் சாம்பலைப் பெறும் விசுவாசி  (2021 Getty Images)

நேர்காணல்: தவக்காலத்தை சிறப்பாக வாழ வழிமுறைகள்

கிறிஸ்தவர்கள் அனைவரும் தவக்காலத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த காலத்தை அர்த்தமுள்ள முறையில் நாம் கடைப்பிடிப்பதற்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்று முக்கிய நற்பண்புகளை மையப்படுத்தி, செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

பிப்ரவரி 17, இப்புதனன்று, கிறிஸ்தவர்கள் அனைவரும் தவக்காலத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த காலத்தை அர்த்தமுள்ள முறையில் நாம் கடைப்பிடிப்பதற்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்று முக்கிய நற்பண்புகளை மையப்படுத்தி, செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வத்திக்கான் வானொலியில், இன்றைய நம் நிகழ்ச்சியில், அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், திருத்தந்தை வழங்கியுள்ள தவக்கால செய்தி, மற்றும், அதையொட்டிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சார்ந்தவர். இவர் அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். ஆப்ரிக்க மறைபோதக சபை, ஆப்ரிக்காவில் 17 நாடுகளிலும், இன்னும், இந்தியா, பிலிப்பீன்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும், மறைப்பணியாற்றி வருகின்றது

நேர்காணல்: தவக்காலத்தை சிறப்பாக வாழ வழிமுறைகள்
18 February 2021, 14:30