தேடுதல்

Vatican News
குழந்தைகளுடன் பெற்றோர் குழந்தைகளுடன் பெற்றோர்  

மகிழ்வின் மந்திரம் : நிலையான தன்மைக்குரிய அர்ப்பணிப்பு

உண்மையான சுதந்திரத்தை குழப்புவது, இப்போதெல்லாம், எளிதானதாகவும், சாத்தியமானதாகவும், அனுமதிக்கப்படும் ஒன்றாகவும் மாறிப்போகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலில், ‘குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்’ என்ற இரண்டாவது பிரிவின்கீழ்,  'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' குறித்துப் பேசும் பகுதியில், 34ம் பத்தியில், திருத்தந்தை கூறும் கருத்துக்களை இங்கே காண்போம்.

குடும்பம் குறித்து புரிந்து கொள்வதற்கு தடையாக இன்று பல்வேறு கூறுகள் உள்ளன. இத்தகையக் கூறுகளை நாம் தேவைப்படும்போது, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றோம். இறுதியில் என்ன நடக்கின்றது என்றால், வழிகாட்டுதலை வழங்குவதற்கான உண்மைகள், மதிப்பீடுகள், மற்றும், கொள்கைகள் எதுவும் இல்லை என்பதுபோல், ஒவ்வொருவரும் தன்னிச்சையாக செயல்படமுடியும் என்ற எண்ணத்துடன், உண்மையான சுதந்திரத்தை குழப்புவது, இப்போதெல்லாம் எளிதானதாகவும், சாத்தியமானதாகவும், அனுமதிக்கப்படும் ஒன்றாகவும் மாறிப்போகின்றது.  தம்பதியருக்கே மட்டும் உரியவைகளையும், நிலையான தன்மைக்குரிய அர்ப்பணிப்பையும் குறியீடாகக் கொண்டிருக்கும் திருமணத்தின் இலட்சியம், பலவேளைகளில் வசதிக்கேற்றார்போல் ஒதுக்கிவைக்கப்படுகின்றது. தனிமை தரும் அச்சமும், நிலையான தன்மை, மற்றும் விசுவாசமாக இருத்தலுக்குரிய ஆவலும், உறவுகளில் அருகருகே இருக்கும்போது, ஒருவரின் தனிப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்கு இடையூறாக இருக்கும் அச்சத்துடனேயே வளர்ந்து வருகின்றன. (அன்பின் மகிழ்வு 34)

10 February 2021, 15:27