தேடுதல்

Vatican News
ஆப்ரிக்காவின் கானா நாட்டில் இனறையக் குடும்பம் ஆப்ரிக்காவின் கானா நாட்டில் இனறையக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : கடவுள் இல்லாத குடும்ப வாழ்வு

ஒரு சில சமுதாயங்களில் மத நம்பிக்கை, மற்றும் சமயம் சார்ந்த நடைமுறைகள் வலுவற்றிருப்பது, குடும்பங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்குகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'இன்றையக் குடும்பத்தின் உண்மை நிலை' என்ற தலைப்பில், குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும், அவற்றையொட்டி, ஆயர்கள் மாமன்றத் தந்தையர் பகிர்ந்துள்ள கருத்துக்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொகுத்து வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்றாக, மத நம்பிக்கையற்ற சமுதாயத்தாலும், குடும்பங்கள் மீது அக்கறையில்லாத அரசாலும், குடும்பத்தினர் நடுவே, குறிப்பாக, இளையோரிடையே திருமணம் புரிந்துகொள்வது, குழந்தைகளைப் பெறுவது போன்ற விடயங்களில் காணப்படும் தயக்கங்களை, 43ம் பத்தியில் இவ்வாறு விவரித்துள்ளார்:

"ஒரு சில சமுதாயங்களில் மத நம்பிக்கை, மற்றும் சமயம் சார்ந்த நடைமுறைகள் வலுவற்றிருப்பது, குடும்பங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்குகிறது. இத்தாக்கங்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், இன்னும் கூடுதலாகத் தனிமைப்படுத்துகின்றன.

மனிதரின் தனிப்பட்ட வாழ்வில், கடவுள் இல்லாமல் போனதாலும், உறவுகள் வலுவிழந்திருப்பதாலும், இன்றைய கலாச்சாரம் சந்திக்கும் பெரும் வெறுமையின் அறிகுறியாக, தனிமை உள்ளது என்று, ஆயர்கள் மாமன்றத்தின் தந்தையர் குறிப்பிட்டுள்ளனர். சமுதாய, மற்றும் கலாச்சார எதார்த்தங்கள், குடும்பங்களைச் சிதைக்கும்போது, அதற்குமுன், சக்தியற்றிருப்பதைப்போன்ற உணர்வு எழுகிறது. சமுதாயக் கட்டமைப்புக்கள் தங்கள் மீது அக்கறையற்றிருப்பதாகவும், தங்களைக் கைவிட்டதாகவும் குடும்பங்கள் அடிக்கடி உணர்கின்றன.

மக்கள்தொகை நெருக்கடி, குழந்தை வளர்ப்பில் சிரமம், புதிய உயிரை வரவேற்க தயக்கம், வயது முதிர்ந்தோரை சுமையாகக் கருதுதல், வன்முறையாக வெடிக்கும் மனநலப் பிரச்சனைகள் ஆகிய அனைத்திலும், சமுதாய அமைப்பின் எதிர்மறைத் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. சட்டங்களை உருவாக்குவதும், இளையோரின் எதிர்காலத்தை உறுதி செய்வதும், இளையோர் குடும்பத்தை உருவாக்கும் திட்டத்தில் உதவி செய்வதும் அரசின் தார்மீகப் பொறுப்பு." (அன்பின் மகிழ்வு 43)

23 February 2021, 15:00