தேடுதல்

Vatican News
குடும்பம் குடும்பம்  

மகிழ்வின் மந்திரம்: இன்றைய கலாச்சாரத் தாக்கத்தில் குடும்பங்கள்

தம்பதியர்க்கிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதற்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பது, குடும்ப வாழ்வை, மேலும் மனிதம் மிக்கதாக அமைப்பதற்கு உதவும். (அன்பின் மகிழ்வு 32)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவிற்கு, ‘குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்’ (பத்திகள் 31-57) என்று தலைப்பிட்டு, தன் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பிரிவில், பத்திகள் 32 முதல், 49 வரை, 'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' என்று துணை தலைப்பிட்டு, அவற்றில் எண் 32ல், மாறிவரும் கலாச்சார மாற்றங்கள், நற்செய்தி கூறும் குடும்ப அமைப்புமுறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை திருத்தந்தை விளக்கியுள்ளார்.

இன்றைய குடும்பம் எதிர்கொள்ளும், அனைத்து இன்ப, துன்பங்களோடு, அதன் உண்மையான நிலையை, கிறிஸ்துவின் போதனைகளுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதோடு நோக்குவோம். நம் காலத்தில் நிகழும், மனித இயல், மற்றும், கலாச்சார மாற்றங்கள், வாழ்வின் எல்லா நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மற்றும், அவை, விமர்சன, மற்றும், பலதரபட்ட ஓர் அணுகுமுறைக்கும் அழைப்பு விடுக்கின்றன. பல ஆண்டுகளுக்குமுன்னர், இஸ்பானிய ஆயர்கள், குடும்பங்கள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். “கடமைகள், பொறுப்புகள், வேலைகள் ஆகிய அனைத்தையும் சமமாகப் பகிர்வதன் வழியாக, குடும்பங்கள், சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கும் நிலைக்கு வந்துள்ளன. உண்மையில், தம்பதியர்க்கிடையே கருத்துப் பரிமாற்றங்கள்  இடம்பெறுவதற்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பது, குடும்ப வாழ்வை, மேலும் மனிதம் மிக்கதாக அமைப்பதற்கு உதவும். அதேவேளை, இன்றைய சமுதாயமோ, நாம் வளர்ந்துவரும் சூழலோ, குடும்பத்தின் பழைய அமைப்புமுறைகள் மற்றும், எடுத்துக்காட்டுகளை ஆய்வுசெய்து வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. மனித இயல் மற்றும், கலாச்சார மாற்றங்களில் நிலவும் முக்கிய மனப்பாங்குகள், தனிப்பட்ட மற்றும், குடும்ப வாழ்வில், தனியாள்கள், கடந்த காலத்தைவிட, இக்காலத்தில், சமுதாய அமைப்புமுறைகளிலிருந்து மிகக் குறைவான ஆதரவைப் பெறுவதற்கே இட்டுச் செல்கின்றன” (அன்பின் மகிழ்வு 32).

08 February 2021, 15:05