தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அவர்களுக்காக நீதிகேட்கும்  அருள்சகோதரிகள் அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அவர்களுக்காக நீதிகேட்கும் அருள்சகோதரிகள்  

வாரம் ஓர் அலசல் – சமுதாய நீதி தழைக்க..

சமூக நீதி என்பது, ஒரு சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும் ஒருதலைச்சார்பற்று வழங்கப்படும் நீதியாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு மனிதரும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமுதாய நீதியாகும். சமூக நீதி என்பது, ஒரு சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும் ஒருதலைச்சார்பற்று வழங்கப்படும் நீதியாகும். 1995ம் ஆண்டில், டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உலக சமுதாய மேம்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், 'உலக நாடுகளில் காணப்படும் வறுமையை அகற்றி, முழுநேர வேலை வாய்ப்பை அதிகரித்து, அனைத்துத் தரப்பினரும் மனித மாண்போடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கேற்ற சமுதாயமாக உலக நாடுகள் அமைய வேண்டும்' என்பது, முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது. இந்தியாவில், 2017--18ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், வேலைவாய்ப்பின்மை 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2017--18ம் நிதியாண்டில் நகரங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 18.7 விழுக்காடாகவும், பெண்களின் விகிதம் 27.2 விழுக்காடாகவும்  உயர்ந்துள்ளன. கிராமப்புறங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 17.4 விழுக்காடாகவும்,  பெண்களின் விகிதம் 13.6 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன. இலங்கையின் வருங்காலத்தை கண்முன்கொண்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று, உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பான, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. ஆனால், நாடுகளில், குறிப்பாக, இந்தியாவில், இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை நாம் அறிந்ததே. சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோரின் நல்வாழ்வுக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்துள்ள 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கும், அவரோடு சிறையில் வாடுகின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும், இன்னும் நீதி கிட்டவில்லை. அவர்கள் யாருடைய மாண்புள்ள வாழ்வுக்காக உழைத்தார்களோ அவர்களும் நீதியை இன்னும் சுவைக்கவில்லை. தலைநகர் டில்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் நீதிக்கான குரல்களுக்கு, இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நலிந்தோர், வறியோர், வாய்ப்பிழந்தோர் போன்றோர் ஓரங்கப்பட்டுகின்றனர் என்ற குமுரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவ்வேளையில், ஒவ்வொரு மனிதரும் மாண்பு மிக்கவர், அவர் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார், அருள்பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாவட்டம்.

வாரம் ஓர் அலசல் – சமுதாய நீதி தழைக்க..

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2021, 13:36