தேடுதல்

Vatican News
Weekly Program: Retrospective of 2020	Weekly Program: Retrospective of 2020  

வாரம் ஓர் அலசல் – 2020ம் ஆண்டு ஒரு மீள்பார்வை

2020ம் ஆண்டை அலசும்போது, இந்த கொரோனா பெருந்தொற்றுக்கும் நாம் வாழப் பழகிக்கொண்டோம் என்பதையே நமது பல்வேறு செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த உலகினின்று இந்த தொற்றுக்கிருமி என்று மடியும் என்ற எதிர்பார்ப்போடு 2021ம் ஆங்கில புத்தாண்டில் கால் பதித்துள்ளோம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் கடந்துவந்துள்ள 2020ம் ஆண்டு, நம்மையெல்லாம் கொரோனா அச்சத்திலேயே ஆழ்த்தியிருந்தது. அச்சம் மட்டுமல்ல, அது, பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளையும் சந்திக்க வைத்தது. இவற்றுக்கு மத்தியில், பல்வேறு குடும்பங்களில் பல நல்ல சுப காரியங்களும் நடந்துமுடிந்துள்ளன. 2020ம் ஆண்டை அலசும்போது, இந்த கொரோனா பெருந்தொற்றுக்கும் நாம் வாழப் பழகிக்கொண்டோம் என்பதையே நமது பல்வேறு செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த உலகினின்று இந்த தொற்றுக்கிருமி என்று மடியும் என்ற எதிர்பார்ப்போடு 2021ம் ஆங்கில புத்தாண்டில் கால் பதித்துள்ளோம். இந்த புதிய ஆண்டில், மேற்குலகில், இந்த பெருந்தொற்றுக்கு, தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய ஆண்டில் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கை பலரில் துளிர்விட்டுள்ளது. இவ்வேளையில், கடந்த 2020ம் ஆண்டில், உலக அரங்கிலும், திருஅவையிலும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை அலசுகிறார், அருள்பணி A. விக்டர் தாஸ். இவர், தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு, தொழிலாளர் மற்றும், பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் செயலர்

வாரம் ஓர் அலசல் – 2020ம் ஆண்டு ஒரு மீள்பார்வை
04 January 2021, 14:07