தேடுதல்

Vatican News
உரோம் நகரில் நடைபெற்ற அமைதிக்காக இறைவேண்டல் நிகழ்வு உரோம் நகரில் நடைபெற்ற அமைதிக்காக இறைவேண்டல் நிகழ்வு   (ANSA)

வாரம் ஓர் அலசல்: திருத்தந்தையின் 54வது உலக அமைதி நாள் செய்தி

தூக்கியெறியும் கலாச்சாரமும், ஏற்றத்தாழ்வுகளும் பெருகிவரும் இன்றையச் சூழலில், மனிதர்களை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை உருவாக்க அரசுத்தலைவர்களுக்கு சிறப்பான ஓர் அழைப்பு - திரு த்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

2021ம் ஆண்டு சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, சிறப்பிக்கப்பட்ட 54வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த டிசம்பர் 17ம் தேதி சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டார். "அமைதியின் பாதை, பேணிக்காக்கும் கலாச்சாரம்", கோவிட்-19 நெருக்கடியால் உருவான இழப்புகள், பேணிக்காக்கும் அழைப்பிற்கு ஊற்றாக விளங்கும் படைக்கும் இறைவன், பேணிக்காப்பதன் எடுத்துக்காட்டாக, படைக்கும் இறைவன், பேணிக்காக்கும் கலாச்சாரத்தில் இயேசு, மனிதர்களை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை உருவாக்க, பேணிக்காக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் கல்வி போன்ற தலைப்புக்களில் திருத்தந்தையின் அச்செய்தி அமைந்திருந்தது. தூக்கியெறியும் கலாச்சாரமும், ஏற்றத்தாழ்வுகளும் பெருகிவரும் இன்றையச் சூழலில், மனிதர்களை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை உருவாக்க அரசுத்தலைவர்களுக்கு சிறப்பான ஓர் அழைப்பை, திருத்தந்தை அச்செய்தியில் வெளியிட்டிருந்தார். 2020ம் ஆண்டு, கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், நெருங்கிய உறவுகளை இழந்தோர், வேலைகளை இழந்தோர் அனைவரையும் தான் எண்ணிப்பார்ப்பதாகக் கூறிய திருத்தந்தை, இந்தக் கொள்ளைநோய் காலத்தில் பணியாற்றிய நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ஆன்மீகப் பணியாளர்கள் அனைவரும் தன் எண்ணங்களில் இருப்பதையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தையின் 54வது உலக அமைதி நாள் செய்தியின் சுருக்கத்தை இன்று தமிழில் நமக்கு வழங்குகிறார், அருள்பணி முனைவர் டெனிஸ். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த இவர், உரோம் மாநகரில் அமைந்துள்ள, மரியானும் எனப்படும் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

திருத்தந்தையின் 54வது உலக அமைதி நாள் செய்தி
11 January 2021, 14:44