தேடுதல்

Vatican News
வாஷிங்டன் நகரில், மனித வாழ்வுக்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணி - கோப்புப் படம் சனவரி, 2019 வாஷிங்டன் நகரில், மனித வாழ்வுக்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணி - கோப்புப் படம் சனவரி, 2019  (AFP or licensors)

வாழ்வுக்கு ஆதரவு பேரணியில் பங்குபெறுவோருக்கு

வாஷிங்டன் நகரில் ஒவ்வோர் ஆண்டும், மனித வாழ்வுக்கு ஆதரவாக இடம்பெறும் மாபெரும் பேரணி, இவ்வாண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வலைத்தளம் வழியாக நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 29, இவ்வெள்ளியன்று, மனித வாழ்வுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில், மெய்நிகர் வழியில் பங்குபெற்ற அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைபேறு பலன்களை அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

பாவத்தை விலக்கி நடப்பதாக உறுதியெடுத்து, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்று, திருநற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்பவர்களுக்கு, முக்கியமான நிகழ்வுகளின்போது, நிறைபேறு பலன்கள் வழங்கப்படுகின்றது. 

வாஷிங்டன் நகரில் ஒவ்வோர் ஆண்டும், மனித வாழ்வுக்கு ஆதரவாக இடம்பெறும் மாபெரும் பேரணி, இவ்வாண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வலைத்தளம் வழியாக நடைபெற்றது.

இவ்வாண்டு இந்த பேரணியை முன்னிட்டு, சனவரி 28, இவ்வியாழனன்று, வாஷிங்டன் தேசிய அமலமரி திருத்தலத்தில், இறைவேண்டல் வழிபாடும், 29, இவ்வெள்ளியன்று திருப்பலியும் நடைபெற்றன.

இந்தப் பேரணி, இவ்வாண்டு மெய்நிகர் வழியாக நடைபெறும் என்றும், அதில் பங்குகொள்வோர் நிறைபேறு பலன்களைப் பெறுவர் என்றும், திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள், சனவரி 13ம் தேதியன்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

29 January 2021, 15:23