தேடுதல்

வாழ்வுக்கு ஆதரவாக பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் வாழ்வுக்கு ஆதரவாக பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் 

மகிழ்வின் மந்திரம் - கசப்பான உண்மைகள்

மணவிலக்கு குறித்த கேள்வி இயேசுவின் முன்னர் கொணரப்பட்டபோது, திருமணத்தைக் குறித்து அவர் தெளிவாக விளக்குகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன், அன்பின் மகிழ்வு (amoris laetitia) ஏட்டின் துவக்கத்தில் குடும்பம் குறித்தும், குழந்தைகள் பற்றியும் பேசிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் பிரிவின் மூன்றாவது பகுதியில், இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கும் துயர்களை, அதாவது, உண்மை நிலைகளை முன்வைக்கிறார்.

128ம் திருப்பாடல் குடும்ப அங்கத்தினர்கள் குறித்த ஓர் அமைதியான, மகிழ்வான சூழலை விவரிக்கின்றது. ஆனால், விவிலியத்தின் பல இடங்களில் நாம், குடும்பப் பிளவுகள், துயர்கள், வன்முறைகள் என்ற கசப்பான உண்மைகளைக் காண்பதால், இந்தத் திருப்பாடலை முரண்பாடான ஒன்றாக நோக்கத் தேவையில்லை. அவ்வப்போது, சரியான பாதை குறித்த விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் தேவைப்படுவதையே இது குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக, புதிய ஏற்பாட்டில், மணவிலக்கு குறித்த கேள்வி, இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, திருமணத்தைக் குறித்து அவர் தெளிவாக விளக்குகிறார் (மத் 19:3-9). படைப்பின் துவக்கத்தில் பாவம் உலகில் நுழைந்தபோது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவியிருந்த, அன்பும் புனிதத்தன்மையும்,  ஆதிக்க மனப்பான்மையாக மாறி உட்புகுந்ததையும் நாம் காண்கிறோம். “உன் கணவன்மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” (தொ.நூ. 3:16) என்பதை தொடக்க நூலில் வாசிக்கிறோம்.(அன்பின் மகிழ்வு 19)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2021, 15:08