தேடுதல்

ஞானிகள் வருகை ஞானிகள் வருகை 

நேர்காணல்: புனித கன்னி மரியா, கடவுளின் தாய்

கி.பி.431ம் ஆண்டில் எபேசு நகரில் நடைபெற்ற பொதுச்சங்கத்தில், புனித கன்னி மரியா, கடவுளின் தாய் என்ற பேருண்மை அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவத்தில், 7ம் நூற்றாண்டிலிருந்து, சனவரி முதல் நாளன்று, புனித கன்னி மரியாவின் தாய்மை கொண்டாடப்பட்டு வந்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

சனவரி 1, புத்தாண்டு நாளன்று, திருஅவையில், புனித கன்னி மரியா, கடவுளின் தாய் என்ற பெருவிழா சிறப்பிக்கப்படுகின்றது. கி.பி.431ம் ஆண்டில் எபேசு நகரில் நடைபெற்ற பொதுச்சங்கத்தில், புனித கன்னி மரியா, கடவுளின் தாய் என்ற பேருண்மை அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவத்தில், 7ம் நூற்றாண்டிலிருந்து, சனவரி முதல் நாளன்று, புனித கன்னி மரியாவின் தாய்மை கொண்டாடப்பட்டு வந்தது.  இந்த விழா, உரோம் நகரில், 13 மற்றும், 14ம் நூற்றாண்டுகளில் கொண்டாடப்படத் தொடங்கியது. அரசர் ஜோசப் மானுவேல் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், போர்த்துக்கல், பிரேசில் மற்றும் அல்ஜீரியா நாடுகளின் மறைமாவட்டங்களில் மே மாதம் முதல் ஞாயிறன்று இதனை விழாவாகக் கொண்டாட,  திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், 1751ம் ஆண்டு சனவரி 22ம் தேதி அனுமதி அளித்தார். பின்னர் இந்த விழாவை பல நாடுகளும் கொண்டாடத் தொடங்கினள. 1914ம் ஆண்டில் இந்த விழா, அக்டோபர் 11ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. 1931ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இந்த விழாவை அகிலத்திருஅவையும் சிறப்பிக்குமாறு பணித்தார். 1974ம் ஆண்டில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், கிறிஸ்துவின் விருத்தசேதனம் என்ற இந்த விழாவின் பெயரை, கன்னி மரியா, கடவுளின் தாய் என்ற பெருவிழாவாக மாற்றினார். இவ்வேளையில், புனித கன்னி மரியா, கடவுளின் தாய் என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது, அன்னை மரியாவுக்கு இவ்வளவு பெரிய விழா எடுக்கவேண்டுமா என்பன போன்ற நம் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார், அருள்பணி முனைவர் டெனிஸ். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த இவர், உரோம் மரியாணும் எனப்படும் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

நேர்காணல்: புனித கன்னி மரியா, கடவுளின் தாய்
07 January 2021, 13:56