தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு 

'ஹால்கி உச்சிமாநாடு' - கோவிட்-19, சுற்றுச்சூழல் நெருக்கடி

சுற்றுச்சூழல் நெருக்கடியையும், கோவிட்-19 நெருக்கடியையும் மையப்படுத்தி, Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை, வலைத்தளம் வழியே, ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் மெய் நிகர் கருத்தரங்கு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் நெருக்கடியையும், இன்று உலகை வதைத்துவரும் கோவிட்-19 நெருக்கடியையும் மையப்படுத்தி, Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை, சனவரி 26, 27, 28 ஆகிய மூன்று நாள்களில், வலைத்தளம் வழியே, மெய் நிகர் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

'ஹால்கி உச்சிமாநாடு' (“Halki Summit”) என்றழைக்கப்படும் இந்த கருத்தரங்கிற்கு, "கோவிட்-19ம், காலநிலை மாற்றமும்: உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து வாழ்வதும், கற்றுக்கொள்வதும்" என்பது தலைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கின் துவக்க உரையை வழங்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு அவர்கள், இயற்கையோடு நமது உறவை முறித்துக்கொண்டதால், தற்போது, மனித இனமும், சுற்றுச்சூழலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்பதை, தன் மையக்கருத்தாக வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து உரையாற்றும் ஏனைய அறிஞர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, சமுதாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் உருவாக்கியிருக்கும் தாக்கங்களைக் குறித்து பேசுவர் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் நாள் கருத்தரங்கில், இந்த பெருந்தொற்றை தொடர்ந்துவரும் நாள்களில், அரசியல், அறிவியல் மற்றும் மதம் ஆகிய தளங்களில் நாம் சந்திக்கவிருக்கும் சவால்களையும், அவற்றிற்கு நாம் வழங்கக்கூடிய பதிலிறுப்பையும் குறித்து கருத்துப்பரிமாற்றங்கள் இடம் பெறுகின்றன.

இறுதி நாளான, சனவரி 28ம் தேதி, பன்னாட்டு உறவுகள், இந்த பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள உடல் நலம், குறிப்பாக, மன நலம் சார்ந்த பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2021, 15:04