தேடுதல்

Vatican News
பணியில் இந்திய இரயில்துறை தொழிலாளர்கள் பணியில் இந்திய இரயில்துறை தொழிலாளர்கள்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் - ஒவ்வொருவரும் உழைக்கவேண்டியது அவசியம்

உழைப்பின் அவசியம் குறித்து தெளிவாக உணர்ந்திருந்த புனித பவுல் தரும் கண்டிப்பான கட்டளை : “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது”

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், குடும்பங்கள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதன் தொடர்ச்சியாக, “உங்கள் கரங்களில் உழைப்பு” என்ற தலைப்பில், உழைப்பின் மகத்துவம்  குறித்து விவரிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்  24ல், ஒவ்வொருவரும் உழைக்கவேண்டியது அவசியம் என்பதை விவிலிய மேற்கோள்களுடன் எடுத்துரைக்கிறார்.

உழைப்பு என்பது, சமுதாய வளர்சசிக்கு உதவுவதுடன், உழைப்பவரின் குடும்பம் வாழ்வதற்கும், நிலைத்திருப்பதற்கும், பலன் பெறவும், உதவுவதாக உள்ளது.

உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! (தி.பா. 128:5-6).

நீதி மொழிகள் நூலின் இறுதிப் பிரிவில், நல்ல மனையாள் என்ற தலைப்பில், ஒரு குடும்பத்திற்குள் ஒரு தாய் எவ்விதம் உழைக்கிறார் என்பதையும், தன் கணவர், மற்றும் குழந்தைகள் போற்றிப் புகழும்படியாக எவ்வாறு வாழ்கிறார் என்பதையும், விரிவாக காண்கிறோம் (நீ.மொ. 31:10-31). புனித பவுலும், தான் மற்றவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாமல், தன் கையாலேயே உழைத்து உண்பதில் பெருமையடைவதாக கூறுகிறார்  (தி.ப. 18:3; 1கொரி 4:12; 9:12). உழைப்பின் அவசியம் குறித்து தெளிவாக உணர்ந்திருந்த புனித பவுல், தன் சமுதாயத்திற்கு ஒரு கண்டிப்பான கட்டளையையும் தருகிறார். “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” (2 தெச. 3:10; காண். 1 தெச. 4:11) என்பதே அக்கட்டளை. (அன்பின் மகிழ்வு - 24)

29 January 2021, 15:02