தேடுதல்

அயர்லாந்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அயர்லாந்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

மகிழ்வின் மந்திரம் : குடும்பத்திற்கு ஆறுதல் தரும் இறைவார்த்தை

குடும்பங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் இறுதியில் "அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்.” (திருவெளிப்பாடு 21:4)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘அன்பின் மகிழ்வு’, என்ற ஏட்டில், துயரமும், இரத்தமும் தோய்ந்த பாதை என்ற உபதலைப்பில், குடும்பத்தைப் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய கருத்துக்களின் நிறைவாக, 22ம் எண்ணில் அவர் கூறும் எண்ணங்கள் இதோ: “இறைவார்த்தை, நடைமுறை வாழ்வுடன் தொடர்பில்லாத சிந்தனைத் தொகுப்பு அல்ல, மாறாக, துயரங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது ஆறுதல் தருகிறது என்பதை குடும்பத்தின் துயரங்கள் என்ற இப்பகுதியில் நம்மால் காணமுடிகிறது. குடும்பங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் இறுதியில் "அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” (திருவெளிப்பாடு 21:4) என்பதை, இறைவார்த்தை உணர்த்துகிறது.” (அன்பின் மகிழ்வு 22)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2021, 11:45