தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

மகிழ்வின் மந்திரம்: குடும்பத்தின் பாதையில் துன்பமும், இரத்தமும்

காயின் தன் உடன்பிறந்த ஆபேலைக் கொல்வதில் ஆரம்பித்து, விவிலியத்தின் பல பக்கங்களில் துன்பமும், இரத்தமும் பதிந்துள்ளன

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குடும்பத்தின் பாதையில் துன்பமும், இரத்தமும் இருக்கும் என்பதை, 19 முதல் 22 முடிய உள்ள நான்கு எண்களில் விவரித்துள்ளார். இவற்றில், 20ம் எண்ணில், திருத்தந்தை பகிர்ந்துள்ள எண்ணம் இதுதான்:

“காயின் தன் உடன்பிறந்த ஆபேலைக் கொல்வதில் ஆரம்பித்து, விவிலியத்தின் பல பக்கங்களில் துன்பமும், இரத்தமும் பதிந்துள்ளன. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூதாதையரின் குடும்பங்களில் நிகழும் மோதல்கள், தாவீது குடும்பத்தில் நிகழும், வன்முறை, துயரங்கள், தோபித்து கதையில் கூறப்பட்டுள்ள குடும்பப் பிரச்சனைகள் ஆகியவற்றை விவிலியத்தில் காண்கிறோம். யோபுவின் புலம்பலில், குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன:

என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்; எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்; என் உற்றார் என்னை ஒதுக்கினர்; என் நண்பர்கள் என்னை மறந்தனர். என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன். (யோபு 19:13-14,17)” (அன்பின் மகிழ்வு – 20)

25 January 2021, 14:34