தேடுதல்

Vatican News
'அன்பின் மகிழ்வு குடும்பம்' ஆண்டு 'அன்பின் மகிழ்வு குடும்பம்' ஆண்டு 

மகிழ்வின் மந்திரம் : 'நீங்களும் உங்கள் மனைவியும்'

ஆணையும், பெண்ணையும் படைத்த இறைவன், தன் படைப்புக்களைக் கடந்துவாழ்கிறார். அவரது படைப்பாற்றலில் மனிதர்கள் பங்கேற்பதால், அவர்கள் இறைவனின் உருவைப் பெற்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலில், 'இறைவார்த்தையின் ஒளியில்' என்ற தலைப்பில் எழுதியுள்ள முதல் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களைக் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 8 முதல் 30 முடிய உள்ள 23 எண்கள் கொண்ட முதல் பிரிவு, ஐந்து துணைப் பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த துணைப்பிரிவுகளில், முதல் பிரிவு, 'நீங்களும் உங்கள் மனைவியும்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பிரிவின் 2வது கருத்தாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவது இதுதான்: 

“தொடக்க நூலின் மாண்புமிகுந்த ஆரம்பப் பிரிவுகள், மனித தம்பதியரை ஆழ்ந்த எதார்த்தத்துடன் நம்முன் வைக்கின்றன. விவிலியத்தின் முதல் பக்கங்கள், சில தெளிவான கூற்றுகளைப் பதிவு செய்துள்ளன. "கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்." (தொ.நூ. 1:27) என்ற இந்தக் கூற்றில், ஆண், பெண் என்ற உருவில் கடவுள் இருப்பதாக நாம் பொருள் கொள்ளலாம். இந்த எண்ணம், பல பழமை வாய்ந்த மதங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணத்தை கத்தோலிக்கத் திருஅவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆணையும், பெண்ணையும் படைத்த இறைவன், தன் படைப்புக்களைக் கடந்துவாழ்கிறார். அவரது படைப்பாற்றலில் மனிதர்கள் பங்கேற்பதால், அவர்கள் இறைவனின் உருவைப் பெற்றுள்ளனர்.” (அன்பின் மகிழ்வு 10)

11 January 2021, 14:41