தேடுதல்

Vatican News
Myeongdong பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி Myeongdong பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி 

வாரத்திற்கு 1400 உணவு பொட்டலங்கள் - Seoul பேராலயம்

ஏழைகளை நோக்கி உங்கள் கரங்களை விரித்து வரவேற்பு வழங்குங்கள் என்ற திருத்தந்தையின் அழைப்பை ஏற்று துவக்கப்பட்டுள்ள பிறரன்பு பணிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரிய தலைநகரில் வாழும் ஏழை மக்களுக்கு வாரத்திற்கு மும்முறை என, வாரத்திற்கு, 1400 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது Myeongdong பேராலயம்.

Seoul பெருங்கோவில் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் சிலரின் துணையுடனும், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்களின் ஆதரவுடனும் துவக்கப்பட்டுள்ள இந்த பிறரன்புப்பணி, மறைமாவட்ட காரித்தாஸ் இயக்கத்தின், 'ஒரே உடல் ஒரே ஆவி' என்ற குழுவினரால் எடுத்து நடத்தப்படுகிறது.

ஏழைகளை நோக்கி உங்கள் கரங்களை விரித்து, வரவேற்பு வழங்குங்கள் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, இந்த பிறரன்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக உரைத்த கர்தினால் Yeom அவர்கள், வீடற்றவர்களுக்கென ஒரு தங்குமிடத்தையும், வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனம் ஒன்றையும் துவக்கி, அவர்களையும் சமுதாயத்தின் ஓர் அங்கமாக மாற்ற திட்டம் தீட்டிவருவதாகவும் உரைத்தார்.

திருஅவையிலும், உலகிலும், மனம் நிறைந்த அன்பை வழங்கும் நிலையை உருவாக்க, இந்த பிறரன்பு இயக்கம் ஒரு சிறிய புளிக்காரமாகச் செயல்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார், இவ்வியக்கத்தின் இயக்குனர், அருள்பணி Francis Jeong-hwan Kim. (AsiaNews)

25 January 2021, 14:05