தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு புனித யோசேப்பு  

நேர்காணல் – புனித யோசேப்பு ஆண்டு, 2020,டிச.08-2021,டிச.08

15ம் நூற்றாண்டில், திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதியை, புனித யோசேப்பின் திருநாளாக அறிவித்தார். 1870ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்பை, அகில உலக திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்பை, அகில உலக திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவித்ததன் 150ம் ஆண்டு நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 8, இச்செவ்வாயன்று “ஒரு தந்தையின் இதயத்தோடு என்று பொருள்படும் (Patris corde)” என்ற திருத்தூது மடலை வெளியிட்டு, புனித யோசேப்பு ஆண்டையும் அறிவித்துள்ளார். அந்த ஆண்டு, 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், வருகிற 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிய திருஅவையில் சிறப்பிக்கப்படுகிறது. திருத்தந்தை வெளியிட்டுள்ள அந்த மடலின் சுருக்கத்தைத் தருகிறார், அருள்பணி முனைவர் இயேசு கருணா. இவர், திருச்சி புனித பவுல் இறையியில் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நேர்காணல் – புனித யோசேப்பு ஆண்டு, 2020,டிச.08-2021,டிச.08
10 December 2020, 15:08