நேர்காணல்-அருள்பணி ஸ்டான் சுவாமி அறியாத பீம கொரேகான்
மேரி தெரேசா-வத்திக்கான்
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்கு இன மக்கள் மத்தியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். மனித உரிமைப் போராளியான இவர், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியிலிருந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 83 வயது நிரம்பிய, தமிழரான அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பீம கொரேகான் என்ற இடத்தில் இடம்பெற்ற கலவரத்தோடு தொடர்பு இருப்பதாக, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் அநீதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதற்கிடையே அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பீம கொரேகான் என்கின்ற இடமே தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், இயேசு சபை அருள்பணி முனைவர் அ.ஸ்டீபன் மார்ட்டின் அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் அறியாத பீம கொரேகான் பற்றி நாம் அறிய வேண்டிய வரலாற்றை, மதுரை இலெயோலா வெப் டிவி வலைக்காட்சி வழியாக தெளிவுபடுத்துகிறார்