தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (ANSA)

பாகிஸ்தானில், விரைவில் நீதியான சமுதாயம் உருவாகும்

இளையோரின் உரிமைகளோடு இணைத்து அவர்களின் கடமையையும் வலியுறுத்திய கராச்சி கத்தோலிக்க பயிலரங்கம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி உயர் மறைமாவட்டமும், இலாப நோக்கற்ற பாஹேல் பாகிஸ்தான் (Pahel Pakistan) என்ற அமைப்பும் இணைந்து, இளையோருக்கென மனித உரிமைகள் தொடர்புடைய ஒரு நாள் பயிலரங்கம் ஒன்றை நடத்தியுள்ளன.

கராச்சி உயர்மறைமாவட்டத்தின் தேசிய, நீதி, மற்றும், அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  பயிலரங்கம் பற்றி எடுத்துரைத்த அதன் ஒருங்கிணைப்பாளர் காசிப் ஆன்டனி (Kashif Anthony) அவர்கள், பாகிஸ்தான் நாட்டில் சகிப்புத்தன்மையும், பன்மைத்தன்மையை மதித்தலும் தேவைப்படுவதாகவும், விரைவில் நீதியான சமுதாயம் உருவாகும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமைகளை மையப்படுத்திய இந்த ஒருநாள் பயிலரங்கத்தை இளையோருக்கு வழங்கியபோது, அவர்களின் உரிமைகளோடு இணைத்து, அவர்களின் கடமையையும் வலியுறுத்தியதாக தெரிவித்தார் ஆன்டனி.

மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும்போதுதான், அது பொறுப்புடன் செயல்பட்டதாக நோக்கப்படும் எனவும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் முதலில் மாற்றத்தைக் காணும்போது, அமைதியும் பிறரை ஏற்றுக்கொள்ளலும், தானே வரும் எனவும், அந்த பயிலரங்கத்தில்  எடுத்துரைக்கப்பட்டது. (AsiaNews)

01 December 2020, 15:13